பாலஸ்தீன ஆர்வலர்கள் மீதான தடையை நீக்குக... பிரித்தானியாவிற்கு ஐ.நா கோரிக்கை
Palestine Action என்ற செயற்பாட்டாளர் குழு மீதான பிரித்தானியாவின் தடையை ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.
உரிமைகளை கட்டுப்படுத்துகிறது
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், பிரித்தானிய அரசாங்கம் தனது முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஐ.நா மன்றம் வலியுறுத்தியுள்ளது.
Palestine Action என்ற செயற்பாட்டாளர் குழு மீதான பிரித்தானியாவின் இந்த முடிவு பொருத்தமற்றதாகவும் தேவையற்றதாகவும் தோன்றுவதாக குறிப்பிட்டுள்ள Volker Turk, பாலஸ்தீன நடவடிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள மற்றும் அதை ஆதரிக்கும் பலரின் உரிமைகளை இது கட்டுப்படுத்துகிறது, ஆனால் அவர்கள் எந்தவொரு அடிப்படை குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை.
மாறாக கருத்துச் சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் ஆதரவு தெரிவித்தல் ஆகியவற்றிற்காக தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என அறிக்கை ஒன்றில் Volker Turk குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் Palestine Action குழுவை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஜூலை 5, 2025 முதல் தடை செய்தது. இந்த முடிவானது சிவில் உரிமைகள் குழுக்கள், ஐ.நா. நிபுணர்கள், பிரித்தானிய கலாச்சார பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளால் விமர்சிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |