சுவிஸ் விமான நிலையமொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸ்களால் பரபரப்பு
சுவிஸ் விமான நிலையமொன்றில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸ்களால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேஸ்கள்
நேற்று மதியம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா விமான நிலையத்தின் அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் இரண்டு சூட்கேஸ்கள் கேட்பாரற்றுக் கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வளையம் ஏற்படுத்திய பொலிசார், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைக்க, அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து பதற்றம் நீங்கியது.
தங்கள் உடைமைகளை இப்படி அநாதரவாக விடவேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்ட அதிகாரிகள், அப்படி ஏதேனும் சந்தேகத்துக்கிடமான வகையில் பொருட்களைக் கண்டால் அவற்றைத் தொடவேண்டாம் என்றும், உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அல்லது பொலிசாரை அழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |