சட்டவிரோத முறையில் அமைக்கப்பட்ட மின் வேலிகள் - 50 யானைகள் பலி!
அங்கீகரிக்கப்படாத மின் வேலிகள் மற்றும் சட்டவிரோதமான முறையில் மின்சார கம்பிகளில் தட்டி மின்சாரம் தாக்கி சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக ஏற்கனவே தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
காட்டு யானைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் உதவியை நாடுவதாகவும், மின்சாரக் கம்பிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின் வேலிகளில் சட்ட விரோதமாக தட்டிக் கழிக்கும் சம்பவங்கள் குறித்து புகார் அளிக்குமாறு மக்களை வலியுறுத்துவதாகவும் CEB அறிவித்துள்ளது.
0112118767 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக இது தொடர்பில் உடனடியாக இலங்கை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.