ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை! குறைந்த ஸ்கோரை டிஃபென்ட் செய்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ஸ்கோரை பாதுகாத்து பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் புதிய சாதனை
நடப்பு ஐபிஎல் தொடரின் பரபரப்பான 30 வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோரை பாதுகாத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
111 ஓட்டங்களுக்கு சுருண்டது பஞ்சாப் கிங்ஸ்
சண்டிகரில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆனால் கொல்கத்தா அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரும் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
112 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, தொடக்கத்திலேயே தடுமாறியது.
பஞ்சாப் சுழலில் சிக்கிய கொல்கத்தா
டி காக் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், கேப்டன் ரஹானே மற்றும் அங்ரிஷ் ரகுவன்ஷி ஆகியோர் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர்.
கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆட்டத்தின் போக்கு முழுமையாக மாறியது. சஹால் வீசிய பந்தில் ரஹானே எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, ரகுவன்ஷியும் சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் வெங்கடேஷ் ஐயர் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
அடுத்த ஓவரிலேயே, ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் ஆகியோரை சஹால் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தார்.
What a match! 💥 @realpreityzinta Let’s go ❤️
— Preity Zinta Fandom (@PZ_Fandom) April 15, 2025
Bas, Jeetna Hai 💪🏻#PreityZinta #Chahal #PBKSvKKR #PunjabKings pic.twitter.com/HnQohbxy5c
சஹால் 4 ஓவர்களில் 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
கொல்கத்தா அணி இறுதியில், சஹால் 4 ஓவர்களில் 28 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இதன் மூலம், பஞ்சாப் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை சஹால் வென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |