அவுஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ! 60க்கும் மேலான வீடுகள் சாம்பல்
அவுஸ்த்ரேலியாவின் வடகிழக்கு பகுதியில் பரவிவரும் காட்டுத்தீயில் இதுவரை 60க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானது.
அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பெர்த் நகரத்தில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது. இதில் சுமார் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அனைத்தும் எரிந்து சாம்பலானது.
இதுவரை குறைந்தது 60 வீடுகள் தீயில் அழிந்ததாக கூறப்படுகிறது. இதில் மனித உயிர் சேதங்கள் எதுவுமின்றி, அங்கிருந்த மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர்.
இரண்டு நாட்களாக எரியும் இந்த காட்டுத்தீயில் Wooroloo, Mundaring, Chittering, Northam, Swan உள்ளிட்ட நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று ஓரிரவில் தீ இரட்டிப்பாகி கிட்டத்தட்ட 19,000 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் வனப்பகுதிகள் அழிந்ததாக பெர்த் நகர துணை ஆணையர் கிரேக் வாட்டர்ஸ் கூறயுள்ளார்.
பலத்த காற்று வீசுவதால் நெருப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் இடையூறாக இருப்பதாக அவர் கூறினார்.
சுமார் 250 தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருவதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறை கண்காணிப்பாளர் பீட்டர் சுட்டன் தெரிவித்துள்ளார்.