நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள், நிபந்தனையற்ற மாறுபாடு ; எண்ணெய்ச் சந்தையில் நிலவும் புதிய உண்மைநிலை

By Fathima May 20, 2026 06:46 AM GMT
Report

நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள், நிபந்தனையற்ற மாறுபாடு ; எண்ணெய்ச் சந்தையில் நிலவும் புதிய உண்மைநிலை | Unconditional Volatility New Reality Oil Market

Exness-இன் சிரேஷ்ட நிதிச் சந்தை மூலோபாய நிபுணரான கிறிஸ்தோபர் தாஹிர் அவர்கள் எழுதிய சந்தைப் பகுப்பாய்வு.

சேமிப்புத் தாங்கிகளில் உள்ள கச்சா எண்ணெயிலிருந்து நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் வரையான சந்தை நிலவர மாற்றம்

கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான காலத்திற்கு, எண்ணெய்ச் சந்தைகளில் இருந்த மையக் கேள்வி, ஒப்பீட்டளவில் கேட்க வேண்டியதை நேரடியாகக் கேட்பதாகத்தான் இருந்தது: அதாவது எந்தத் தயாரிப்பாளரிடம் அதிகப் பீப்பாய்கள் இருந்தன, அவர் எத்தனை பீப்பாய்களைச் சந்தைக்கு அனுப்ப முடிவு செய்வார் போன்றவை. கையிருப்புகள், தயாரிப்பு ஒதுக்கீடுகள், துளையிடும் நடவடிக்கை, விநியோகச் சங்கிலி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே விநியோகப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. விநியோகத்தை யார் கட்டுப்படுத்தினார்கள் என்பதில் இருந்த இந்தக் கவனம், வர்த்தகர்கள் தமக்கு ஏற்படக்கூடிய இழப்பை எப்படி மதிப்பிட்டார்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் சந்தையில் தங்களை எப்படி நிலைநிறுத்திக் கொண்டார்கள் என்பதை வடிவமைத்தது.

அந்தக் கட்டமைப்பு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. நாம் தற்போது 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் நுழைகையில், அதிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இருப்பது, அதிகப் பீப்பாய்களை யார் வைத்திருக்கிறார்கள் என்பதல்ல, மாறாக, அந்தப் பீப்பாய்களைச் சந்தைக்கு அனுப்புவதை என்னென்ன நிபந்தனைகள் கட்டுப்படுத்துகின்றன என்பதே ஆகும்.

நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் என்பவை, பௌதீக ரீதியாக இருக்கின்ற, ஆனால் சுதந்திரமாக அனுப்ப முடியாத விநியோகங்களைக் குறிக்கின்றன. தடை விலக்குகள், கப்பல் போக்குவரத்துக்கான அனுமதிகள் அல்லது உலக அரசியல் அபிவிருத்திகள் போன்ற மாறிவரும் காரணிகளைப் பொறுத்து அணுகல் அமைகிறது.

பல சந்தர்ப்பங்களில், பிரத்தியேகமான அரசியல், சட்ட அல்லது போக்குவரத்து அனுமதிகள் பூர்த்திச் செய்யப்படும்போது மட்டுமே அந்த எண்ணெய் உலகளாவிய சந்தைகளை வந்தடைய முடியும். இந்தப் பீப்பாய்களுடன் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மாறாமல் இப்படியே இருப்பவை அல்ல. அவை இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், நிறைவேற்ற உத்தியோகத்தர்கள் எடுக்கும் முடிவுகள், உலக அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றின் போக்குக்கு ஏற்ப மாறுகின்றன. மேலும் அவை மாறும்போது, சந்தைகளின் நிலவரங்களும் வேகமாக மாறிக்கொள்கின்றன.

நிபந்தனைக்குட்பட்ட விநியோக நிலப்பரப்பைத் திட்டமிடுதல்

இன்று நிபந்தனைக்குட்பட்ட கச்சா எண்ணெய் மிக அதிகமாகச் செறிந்திருக்கும் மூன்று நிலப்பரப்புகளாக ஈரான், ரஷ்யா, வெனிசுலா ஆகியவை உள்ளன; அவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய தனித்துவமான நிபந்தனைகளைக் கொண்டுள்ளன.

உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏறக்குறைய 3-4% பங்கை ஈரான் உற்பத்தி செய்கிறது, மேலும் இது அமெரிக்காவின் அதிகபட்ச அழுத்தத் தடைகளுக்கு உட்படுகிறது. அந்தக் கச்சா எண்ணெய்ப் பீப்பாய்களைப் பெறுவது என்பது சில வாரங்களுக்குள்ளேயே விரைவாக மாறக்கூடிய கொள்கை முடிவுகளைப் பொறுத்துள்ளது.

ரஷ்ய நாட்டின் கச்சா எண்ணெய்ப் பீப்பாய்களைப் பெறுவதற்கு வேறொரு வகையான நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும். மேற்கத்திய நாடுகளின் விலை வரம்புகள், கப்பல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், மறைமுகக் கப்பல் படை ஆகியவை, ரஷ்ய கச்சா எண்ணெயைத் தொழில்நுட்ப ரீதியாக ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருந்தாலும், நடவடிக்கை ரீதியாகக் கட்டுப்படுத்தியுள்ள ஒரு சந்தையை உருவாக்கியுள்ளன. விநியோகம் நடந்துகொண்டுதான் இருக்கிறது, ஆனால் அதற்கான அணுகலைப் போக்குவரத்து வசதிகள், இணக்கம், மாறிவரும் அமலாக்க இயக்கவியல் ஆகியவை வரையறுக்கின்றன.

நிபந்தனைக்குட்பட்ட இயக்கவியலுக்கு வெனிசுலா மிகத் தெளிவான விளக்கத்தைத் தருகிறது. தடைகள் மற்றும் உட்கட்டமைப்புக் கட்டுப்பாடுகளின் ஒருங்கிணைந்த விளைவால் உற்பத்தியில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டாலும், அதிகபட்சமாக எவ்வளவு உற்பத்தியைச் செய்ய முடியும் என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமின்றி, விநியோகம் விரைவாகச் சந்தைக்குத் திரும்ப முடியும்.

ஒட்டுமொத்தமாக, இந்த உற்பத்தியாளர்கள் ஏதேனும் ஒரு வகையான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் உலகளாவிய எண்ணெய் விநியோகங்களிற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கை அளிக்கின்றனர். இந்த விநியோகத்தின் ஒரு பகுதி, பௌதீக ரீதியாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தாலும், வணிக ரீதியாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; இது அணுகல் நிலைமைகளில் ஒரு மாற்றம் ஏற்படுவதற்காகக் காத்திருக்கிறது.

நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் ஏன் நிபந்தனையற்ற மாறுபாட்டை உருவாக்குகின்றன

உற்பத்தி முடிவுகளையும் தேவையின் வளர்ச்சியையும் மையமாகக் கொண்டு பாரம்பரிய எண்ணெய்ச் சந்தை மாதிரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டுமே மெதுவாகவே நகர்கின்றன. OPEC+ ஒதுக்கீட்டில் ஏற்படும் ஒரு மாற்றமானது பௌதீக விநியோக மாற்றங்களில் வெளிப்படுவதற்குப் பல மாதங்கள் ஆகும், மேலும் தேவையின் திருத்தங்கள் காலாண்டுகளாக வெளிப்படும் பேரினப் பொருளாதாரச் சுழற்சிகளைப் பின்பற்றுகின்றன. நிபந்தனைக்குட்பட்ட விநியோகம் வித்தியாசமாக நடந்துகொள்கிறது.

தடை விலக்கு, ஓர் இராஜதந்திர வழிமுறையைத் திறப்பது அல்லது ஒரு கொள்கை மாற்றம் போன்றவற்றால் சில மணித்தியாலங்களிலேயே உண்மையான விநியோக நிலையை மாற்ற முடியும். சந்தைகள் ஏற்கனவே இறுக்கமாக இருக்கும்போது, அணுகக்கூடிய விநியோகத்தில் ஏற்படும் சிறிய மாற்றங்கள்கூடக் கடுமையான விலை மாற்றங்களைத் தூண்டக்கூடும். தொடர்புடைய காரணி துளையிடும் முடிவாக இல்லாமல், ஒரு கொள்கை முடிவாக இருக்கும்போது, விலையை மீண்டும் நிர்ணயிப்பதன் வேகம் ஒரு முக்கிய அபாயமாகிறது. சந்தைகளுக்காக உற்பத்தி மாற வேண்டும் என்பது எப்போதும் அவசியமில்லை. அணுகுவதற்கான நிலைமைகள்தான் மாற வேண்டும்.

நிபந்தனைக்குட்பட்ட உலகில் OPEC+ இன் ஒழுக்கம்

இந்தச் சுழற்சி முழுவதும் OPEC+ கணிசமான அளவுக்கு உள் ஒருங்கிணைப்பைச் செய்துகாட்டியுள்ளது. இந்தக் கூட்டணி, யனவரி தொடங்கி மார்ச் 2026 வரை உற்பத்தி அதிகரிப்புகளை நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், மே மாதத்தில் நடைமுறைக்கும் கொண்டுவரவுள்ள நாளொன்றுக்கு 206,000 பீப்பாய்கள் (bpd) என்ற அதிகரிப்பை அறிவித்தது. இந்த எண்ணிக்கை, மூலப்பொருள் விநியோகத்தில் ஏற்படும் தாக்கத்தை விட, சந்தையின் நம்பிக்கையை உணர்த்துவதற்காகவே அதிகமாக அமைக்கப்பட்டது. இந்த ஒழுக்கம் உண்மையானது. பிரச்சனை என்னவென்றால், OPEC+ தனது கட்டுப்பாட்டில் உள்ளவற்றை மட்டுமே ஒழுங்குபடுத்த முடியும்.

OPEC+ அமைப்பால் அமெரிக்கத் தடை விலக்கை வழங்கவோ அல்லது ரத்து செய்யவோ, சர்ச்சைக்குரிய வழித்தடம் வழியாகக் குழாய்வழி அணுகலைப் பேச்சுவார்த்தை மூலம் பெறவோ அல்லது முடங்கியுள்ள உற்பத்தித் திறனைத் திறக்கும் ஒரு நிர்வாகமுறை மாற்றத்தைக் கட்டாயப்படுத்தவோ முடியாது. நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் OPEC+ அமைப்பின் ஒருங்கிணைப்புக் கட்டமைப்பிற்கு வெளியே அமைந்திருந்தாலும், அவை விலை நிலவரங்களில் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்துகின்றன.

தடைகள் தளர்த்தப்படும்போது அல்லது அமுலாக்கம் மாறும்போது, அதன் தாக்கம் எப்போதும் நேரடியானதாக இருப்பதில்லை. விநியோக எதிர்பார்ப்புகளைச் சரிசெய்வதை விட அணுகல் நிலைமைகள் வேகமாக மாறுவதால், சந்தைகள் திடமாக இருப்பதற்குப் பதிலாக அதிகரித்த மாறுபாட்டைக் காட்டக்கூடும். பாரம்பரிய விநியோக இயக்கவியலால் நிர்வகிக்கப்படும் ஒரு சந்தையை நிலைப்படுத்துவதற்கான கருவிகளை OPEC+ தக்க வைத்துக் கொண்டுள்ளது, ஆனால் நிபந்தனைக்குட்பட்ட விநியோகம் அந்தக் கருவிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிச்சயமற்ற தன்மையை உண்டாக்குகிறது.

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சமிக்ஞைகள்

2026-இன் இரண்டாம் பாதியில் செயல்படும் வர்த்தகர்களுக்கு, நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் ஆனவை கண்காணிப்புக் கட்டமைப்பை மாற்றியமைக்கும்படி கோருகின்றன. தொடர்புடைய குறிகாட்டிகளில் உற்பத்தித் தரவு மற்றும் இருப்பு நிலைகளை மட்டுமன்றி வேறு பலவும் உள்ளடங்கும்.

கொள்கையின் காலக்கெடுக்களே மிகவும் உடனடியான தூண்டுதலாகும். தடைகள், விலக்குகள் மற்றும் ஒழுங்குமுறை மாற்றங்கள்மீதான முடிவுகள் நேரடி விநியோக நிகழ்வுகளாகச் செயல்படலாம். மறைமுகக் கப்பல்படையின் செயல்பாட்டையும் ஒரே சமயத்தில் கண்காணிப்பது பலனளிக்கும். கணிசமான அளவு எண்ணெய் மாற்றுப் போக்குவரத்து வலையமைப்புகள் வழியாகத் தொடர்ந்து நகர்கிறது, அங்கு அமுலாக்க நடவடிக்கைகள் விநியோகத்தை விரைவாகக் கட்டுப்படுத்தலாம் அல்லது வெளியே அனுப்பலாம்.

வெனிசுலா அரசியல் நிகழ்வுகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியவை. கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம் எவ்வளவு விரைவாக உலகளாவியச் சந்தைகளுக்குத் திரும்பும் என்பதை அணுகல் நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் தீர்மானிக்கும்.

உற்பத்தித்திறனை விட அரசியல் அனுமதியே குறுகிய கால விநியோகத்தை மாற்றியமைக்கும் காரணியாக இருக்கும் ஒரு சந்தையில், பாரம்பரியமான தேவை-விநியோகப் பகுப்பாய்வு மூலம் தொடர்ந்து எண்ணெய்க்கு விலை நிர்ணயம் செய்யும் வர்த்தகர்கள் தொடர்ந்து எதிர்பாராத சூழ்நிலைகளில் திகைத்துப்போவார்கள். நிபந்தனைக்குட்பட்ட பீப்பாய்கள் கட்டமைப்பு, இருப்புத் தரவுகளை நீங்கள் எவ்வளவு உன்னிப்பாகக் கவனிக்கிறீர்களோ, அதே அளவு தடைக்கால அட்டவணைகள், பொது உரிமத்தின் காலாவதித் திகதிகள் மற்றும் இராஜதந்திரச் சமிக்ஞைகளையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும் என்று உங்களுக்கு அறிவுறுத்துகிறது. 2026-இன் எஞ்சிய காலத்திற்கு, அணுகல் இடர் என்பது விலையின் இடரே ஆகும்.

மாறுபாடானது, வளக் குறைபாட்டைவிட, தடைபட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட பீப்பாய்களை எவ்வளவு விரைவாக மீண்டும் சந்தைக்குக் கொண்டுவர முடியும் என்பதைப் பொறுத்தே அதிகமாக அமையும். பீப்பாய்கள் இருக்கின்றன, ஆனால் அதன் பெருகிவரும் பங்கானது அரசியல் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைக் கடந்து வரவேண்டி உள்ளது. சாத்தியமாக, சந்தைகள் அளவு இடருடன் அணுகல் இடரையும் விலை நிர்ணயம் செய்வதற்கான கூர்மையான கருவிகளை உருவாக்கும், இது முழு வளைகோட்டிலும் நிபந்தனைக்குட்பட்ட விநியோகத்தின் மதிப்பீட்டிற்கு அதிக ஒழுக்கத்தைக் கொண்டுவரும். இருந்தாலும், உலகப் பொருளாதாரக் கட்டமைப்பு அதை எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US