வெளியாகிறது... இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் ‘வெளிவராத’ முழு நேர்காணல்! இது அரச குடும்பதை்தை மேலும் உலுக்குமா? கசிந்த தகவல்
ஓப்ராவுக்கு இளவரசர் ஹரி-மேகன் தம்பதி அளித்த முழு நேர்காணலையும் பிரபல பிரிட்டிஷ் ஊடகமான ITV ஒளிபரப்பவுள்ளதாக ஊடகத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
சிபிஎஸ் நிறுவனம் அமெரிக்காவில் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி நேர்காணலை ஒளிபரப்பிய மறுநாள், அதை பிரித்தானியாவில் ஒளிபரப்பும் உரிமையை 1 மில்லியன் பவுண்டுக்கு பிரிட்டிஷ் ஊடகமான ITV வாங்கியது.
ஓப்ராவுடனான நேர்காணலில் ஹரி-மேகன் தம்பதி பிரித்தானியா அரச குடும்பம் மீது சரமாரியாக குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் முதன்முறையாக ஒளிப்பரப்பான நிகழ்ச்சிளைய சுமார் 17 மில்லியன் பேர் பார்த்தனர், இதனைதொடர்ந்து ITV-யில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியை 12 மில்லியன் மக்கள் பார்த்தனர். மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் எடுக்கப்பட்ட நேர்காணல் எடிட் செய்யப்பட்டு 1 மணிநேரம் 25 நிமிடம் ஒளிபரப்பானது.
எனவே மீதமுள்ள அன்சீன் நேர்காணலை ITV பிரித்தானியாவில் ஒளிபரப்பவுள்ளதாகவும்,முழு நேர்காணலையும் காண மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஊடகத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
முழு நேர்காணலில் ஹரி-தம்பதி, இன்னும் பல குற்றச்சாட்டுகளை சுமத்தலாம் என்றும், இதனால் இது அரச குடும்பத்தை மேலும் உலுக்க வாய்ப்புள்ளது, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ஊடகத்துறை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன