ஜெனீவாவில் ஆவணங்களற்ற குழந்தைகள் நிதியுதவி பெற தடையாக இருந்த சிக்கல் நீங்கியது
ஜெனீவாவில், ஆவணங்களற்ற குழந்தைகள் நிதியுதவி பெற தடையாக இருந்த சிக்கல் நீங்கியுள்ளது. 2013ஆம் ஆண்டு முதல், குறைந்த வருவாய் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மாதம் ஒன்றிற்கு 130 முதல் 180 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், அந்த நிதியுதவியைப் பெறவேண்டுமானால், அந்த குழந்தைகள் வாழிட உரிமம் உடையவர்களாக இருக்கவேண்டும் என்ற ஒரு விதி இருந்தது. ஆக, நிதியுதவி பெற வாய்ப்பிருந்தும் வாழிட உரிமம் இல்லாததால் பலர் அந்த நிதியுதவியை பெற இயலாத நிலை இருந்தது. தற்போது, அந்த தடை நீங்கியுள்ளது.
வாழிட உரிமம் இருந்தால்தான் நிதியுதவி என்னும் கட்டுப்பாடு, சமூகத்தில் சிலரை மட்டும் விலக்கி வைப்பதற்கு வழிவகுக்கும் என்று கூறி, அதை நீக்கவேண்டும் என சோஷியலிஸ்ட் கட்சி கொண்டுவந்த மசோதா ஒன்றை அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, அந்த தடை நீக்கப்பட்டுள்ளதால், இனி வாழிட உரிமம் இல்லாதவர்களூம் அந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
சுவிஸ் நாடளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 57 பேரும் எதிராக 15 பேரும்
வாக்களித்ததைத் தொடர்ந்து, அந்த மசோதா வெற்றியடைந்தது.
இதனால், அரசுக்கு 20,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவு பிடிக்கும் என்றாலும்,
சுமார் 600 குடும்பங்கள் அதனால் பலனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.