சுவிட்சர்லாந்தில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளது: ஒரு ஆறுதலளிக்கும் செய்தி
சுவிட்சர்லாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டு, செப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 2.7 சதவிகிதத்திலிருந்து 2.6 சதவிகிதமாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2021 செப்டம்பர் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களின் விவரங்களின்படி பார்த்தால், சுமார் 200,000 பேர் வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இளைஞர்களைப் பொருத்தவரை, குறிப்பாக 15 முதல் 24 வயதுள்ளவர்களில் வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 2.6 சதவிகிதத்திலிருந்து 2.4 சதவிகிதமாக குறைந்துள்ளது.
50 முதல் 64 வயதுள்ளவர்களில் வேலையில்லாத்திண்டாட்ட வீதம் 2.8 சதவிகிதத்திலிருந்து 2.7 சதவிகிதமாக குறைந்துள்ளது.
இந்த விடயத்திலும், மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. ஜெனீவாவில் வேலையில்லாத்திண்டாட்ட வீதம் 4.8 சதவிகிதமாக இருந்தது. அது தேசிய அளவை (2.6 சதவிகிதம்) ஒப்பிடும்போது, இரண்டு மடங்காகும்.
மிகக் குறைவான வேலையில்லாத்திண்டாட்ட வீதம் உள்ள மாகாணம் Appenzell Innerrhoden ஆகும். அங்கு வேலையில்லாத்திண்டாட்ட வீதம் 0.5 சதவிகிதம்.
அதிக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் காணப்படும் மற்ற மாகாணங்கள் ஜூரா, வாட், பேசல் நகரம் மற்றும் Neuchâtel ஆகிய இடங்களாகும்.
ஜெனீவாதான் நீண்ட காலமாக வேலையில்லாத்திண்டாட்டத்தால் அவதியுற்று வந்துள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்களும் வெளிநாட்டவர்களும்...
2020 இறுதிவாக்கில் 15 முதல் 24 வயதுளவர்களில் 7.3 சதவிகிதத்தினரும், வெளிநாட்டவர்களில் 8.5 சதவிகிதத்தினரும் வேலையில்லாமல் தவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.