குக் வித் கோமாளியில் நடந்த எதிர்பாராத எலிமினேஷன்.., யார் வெளியேறினார் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்குகிறது.
முதல் சீசன் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி தற்போது 6வது சீசன் நடந்து வருகிறது.
மொத்தம் 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏற்கனவே நான்கு பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் டாஸ்கில் 5வதாக வெளியேறிய அந்த நபர் யார் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில், இந்த எலிமினேஷன் டாஸ்கில் உமைர், ராஜு மற்றும் பிரியா ராமன் இடையே நடைபெற்றது.
இதுவரை நடைபெற்ற எலிமினேஷன்கள் ஸ்கோர் போர்டில் யார் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தார்களோ அதை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது.
ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற சமையலின் முடிவில் உமைர் ஸ்கோர் போர்டில் மூன்றாவது இடத்தில் இருந்தார்.
ஆனாலும், உமைர் செய்த உணவு நடுவர்களுக்கு திருப்திகரமாக இல்லாததால் அவர் டேஞ்ஜர் ஜோனுக்கு சென்றார்.
இந்த வார எலிமினேஷன் சமையலில் உமைரின் உணவு சற்று கம்மி மதிப்பெண் பெற்றதால், இந்த வாரம் உமைர் எலிமினேட் ஆவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதன்மூலம் இந்த சீசனின் டாப் 5 போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தகுமார், ஷபானா, ராஜு, பிரியா ராமன் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.
மேலும், இந்த வாரம் இவர்களுக்கு இடையே நடக்கும் டிக்கெட் டூ பினாலியில் வெற்றிபெறுபவர்கள் நேரடியாக பைனலுக்கு தேர்வாகப் போகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |