பிரித்தானியாவில் 9 வயது சிறுவனால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டு!
பிரித்தானியாவில் தனது தோட்டத்தில் எலும்புகளை தேடிக் கொண்டிருந்த சிறுவன் வெடிக்காத இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் குண்டு
பிரித்தானியாவிலுள்ள ஈஸ்ட் டெவோனிலுள்ள தனது தோட்டத்தில் எலும்புகளைத் தேடிக் கொண்டிருந்த சிறுவன் வெடிகுண்டு போல வித்தியாசமான ஒன்றை பார்த்துள்ளார்.
@facebook
உடனே பயத்தில் வீட்டிற்குள் ஒடி வந்து தாயாரிடம் கூறியிருக்கிறான். சிறுவனது தாயாருக்கு சந்தேகம் வர பின்பு பொலிஸாருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.
20 நிமிடத்தில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்தது. வெடிக்குண்டு செயலிழக்கும் படை அங்கு வந்து வெடிகுண்டை எக்ஸ்ரே செய்து அது இரண்டாம் போரில் பயன்படுத்தப்படும் குண்டு என கூறியிருக்கிறார்கள்.
@facebook
மேலும் இன்னும் இது வெடிக்காத குண்டு என்பதால் ஜாக்கிரதையாக அதனைக் கையாண்டனர்.
வெடிக்கப்பட்ட குண்டு
பின்னர் அந்த குண்டை அப்புறப்படுத்தி ஜார்ஜ் பெனிஸ்டனை பேர்ட் என்ற 9வது சிறுவனை அனைவரும் பாராட்டினர். வெடிக்காத குண்டை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த சமவெளியில் அதனை வெடிக்க வைத்துள்ளனர்.
@facebook
அது வெடிக்கும் போது அங்கிருந்த களிமண்கள் அனைத்தும் பறந்து வேறொரு பக்கமாக சிதறியிருக்கிறது. இந்த நிலையில் வெடிகுண்டைக் கண்டுபிடித்த சிறுவனை காவல்துறையினர் தனியாக அழைத்துப் பாராட்டியுள்ளனர்.
மேலும் அந்த குண்டு இரண்டாம் உலகப்போரின் போது மண்ணில் புதைத்து வைத்து வெடிக்கும் வகையை சேர்ந்த குண்டாக கூட இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
@facebook
மேலும் காவல்துறையினர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பற்றியும், அச்சிறுவனது செயலை பாராட்டியும் பதிவிட்டுள்ளனர்.