பெருமழையில் நிரம்பாத திசையன்விளை அதிசய கிணறு: பின்னணியில் இருக்கும் காரணம்
பெருமழையில் கூட நிரம்பாத அதிசய கிணறு பற்றியும், பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பது பற்றியும் பார்க்கலாம்.
திசையன்விளை அதிசய கிணறு
தமிழக மாவட்டமான திருநெல்வேலி, திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி ஊராட்சியில் ஆயன்குளம் அதிசய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் பெருமழையின் போது பல ஆயிரம் கனஅடி உபரி நீர் உள்ளே அனுப்பப்படும். ஆனால், கிணறு ஒரு போதும் நிரம்பி வழிந்ததில்லை.
தற்போது, குமரிக்கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சியால் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 1 லட்சம் கன அடி நீர் ஓடியது. அப்போது, பல ஆயிரம் கன அடி நீர் கிணற்றுக்குள் திருப்பி விடப்பட்டது. ஆனால், அப்போது கூட கிணறு மழைநீரை உள்வாங்கிக் கொண்டிருந்தது.
இதேபோல, கடந்த 2021 -ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் கிணற்றுக்குள் சென்றது. அப்போது கூட கிணறு நிரம்பவில்லை.
ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு
இதனால் திசையன்விளை அதிசய கிணறு குறித்து ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள், அதிசய கிணறு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 50- க்கும் மேற்பட்ட கிணறுகளில் நீரில் இயங்கும் கேமராக்களை பொருத்தினர்.
அப்போது, கிணற்றில் சுண்ணாம்பு பாறை இருப்பது தெரியவந்தது. மழை நீரில் உள்ள ஆக்ஸிஜன் சுண்ணாம்பு பாறைகளில் ரியாக்ஷன் ஆகி அதில் துவாரங்களை ஏற்படுத்தி நாளடைவில் குகைகள் போன்று உருவாக்குகிறது. சில கிணறுகளில் கால்வாய் போன்றும் காணப்படுகிறது. இந்த குகைகளின் வழியாக தண்ணீர் அதிவேகமாக கடத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |