டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி இவரை தேர்வு செய்யாதது துரதிர்ஷ்டவசமானது! வெளிப்படையாக கூறிய இம்ரான் தாஹிர்
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர் யுவேந்திர சாஹல் புறக்கணிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் தொடரில் தொடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்ததின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பு கடினமாகியுள்ளது.
இந்திய அணியின் யுவேந்திர சாஹல் உட்பட பல வீரர்களை டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதே இதற்கு காரணம் என பலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய வீரர் யுவேந்திர சாஹல் புறக்கணிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார்.
சாஹல் ஒரு அற்புதமான பந்து வீச்சாளர். தனிப்பட்ட முறையில் அவர் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதை காண நான் விரும்பினேன்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.