துரதிர்ஷ்டவசமாக அஞ்சியதுபோலவே நடந்துவிட்டது: ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர்
எதிர்பார்த்ததுபோலவே, ஜேர்மனியில் மீண்டும் ஒரு கோவிட் அலை உருவாகிவிட்டதாக ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அஞ்சியதுபோலவே, துரதிர்ஷ்டவசமாக ஜேர்மனியில் கோடைக்கால கோவிட் அலை உருவாகிவிட்டது என்று கூறியுள்ள ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Karl Lauterbach, ஆனால், அடுத்த சில வாரங்களுக்கு அது ஒரு கொஞ்சம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது எனலாம் என்கிறார்.
பொதுவாக கோடையின்போது கோவிட் தொற்று குறையும், ஆனால், அந்த நிலைமை மாறத்துவங்கியுள்ளது என்று கூறியுள்ள Lauterbach, அதற்கு ஒரு காரணம், இப்போது பரவிவரும் ஒமிக்ரான் மாறுபாடு எளிதில் பரவக்கூடியது என்று கூறியுள்ளார்.
மேலும், இப்போதைக்கு ஜேர்மனியில் எந்த கோவிட் கட்டுப்பாடுகளும் அமுலில் இல்லை, ஆகவே, இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட மக்கள் அதிக அளவில் கூட்டங்கூடுகிறார்கள் என்பதுதான் என்கிறார் அவர்.
Eine Sommerwelle war zu erwarten. Freiwilliges Tragen von Masken im Innenraum und eine 4. Impfung sind die besten Gegenmittel. Die vierte Impfung schützt vor schwerer Krankheit und senkt für ein paar Monate, wenn auch unvollständig, Ansteckungsrisiko. Das hilft jetzt sehr vielen https://t.co/VfZACYojeW
— Prof. Karl Lauterbach (@Karl_Lauterbach) June 14, 2022
ஆகவே, முதியவர்களும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தவர்களும் மீண்டும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை தான் பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அப்படிச் செய்வது கொரோனா தொற்றுக்காளாகுவதைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால், ஒருவேளை தொற்றுக்கு ஆளானால், மோசமாக நோய்வாய்ப்படுவதை அது தவிர்க்கும் என்கிறார் Lauterbach.
மேலும், மக்கள் தாங்களாகவே முன்வந்து மாஸ்குகள் அணிந்துகொள்வதுடன், நான்காவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வது கொரோனா தொற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் Lauterbach கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022