செவிலியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் சுவிஸ் அரசு: எச்சரிக்கும் தொழிலாளர் யூனியன்கள்
சுவிட்சர்லாந்தில் செவிலியர்களுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, சுவிஸ் அரசு செவிலியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது.
எச்சரிக்கும் தொழிலாளர் யூனியன்கள்
சுவிட்சர்லாந்தில் சுமார் 14,000 செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல இடங்களில் செவிலியர் பற்றாக்குறை உள்ளது.
அப்படிப்பட்ட சூழலிலும், செவிலியர்களுக்கு உதவாமல் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறது சுவிஸ் தேசிய கவுன்சில்.

செவிலியர்கள் வாரத்துக்கு 50 மணி நேர வேலைக்கு பதிலாக, அதை 45 மணி நேரமாக குறைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதை ஏற்க, ஆளும் சுவிஸ் தேசிய கவுன்சில் மறுத்துவிட்டது.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் வேலை செய்தால் கூடுதல் ஊதியம் என்னும் திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ள சுவிஸ் அரசு, வெறும் 25 சதவிகித கட்டணம் மட்டுமே அதிகரிக்கப்படும் என்று கூறிவிட்டது.
அரசின் இந்த நடவடிக்கைகள் மருத்துவப் பணியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், செவிலியர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளால், செவிலியர்கள் பலர் வேலையை விட்டுவிடக்கூடும் என தொழிலாளர் யூனியன்கள் எச்சரித்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |