எரிபொருள் தொடர்பில் ஜேர்மன் எரிசக்தி அமைப்பின் தலைவர் எச்சரிக்கை
ஜேர்மன் எரிசக்தி அமைப்பின் தலைவர், எரிபொருள் தொடர்பில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
எரிசக்தி அமைப்பின் தலைவர் எச்சரிக்கை
ஜேர்மன் எரிசக்தி அமைப்பான Uniper அமைப்பின் தலைவரான மைக்கேல் லூயிஸ், ஜேர்மனியின் எரிவாயு சேமிப்பகங்களில் போதுமான வேகத்தில் எரிவாயு நிரப்பப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அப்படி எரிவாயு வேகமாக நிரப்பப்படவில்லை என்றால், வரும் குளிர் காலத்தில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரித்துள்ளார் அவர்.
REUTERS/Phil Noble Purchase Licensing Rights
மார்ச் மாதம் முதலே எரிவாயு சேமிப்பகங்களில் எரிவாயு நிரப்பப்பட்டுவருகிறது என்றாலும், அது மிகவும் மெதுவாக நிரப்பப்படுகிறது என்று கூறியுள்ளார் மைக்கேல்.
ஐரோப்பிய எரிவாயு உள்கட்டமைப்பு அமைப்பின் தரவுகளின்படி, ஜேர்மன் எரிவாயு சேமிப்பகங்களில், கடந்த ஆண்டில் இதே நேரத்தில் 38.65 சதவிகித எரிவாயு நிரப்பப்பட்டிருந்த நிலையில், தற்போது 30.64 சதவிகிதமே நிரம்பியுள்ளது.
ஈரான் போரால் எரிவாயு விலை உயர்ந்துள்ளதால், எரிவாயு நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இப்படி எரிவாயு நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டால், அது வரும் குளிர்காலத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் என்றும், அதைத் தவிர்க்க அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார் மைக்கேல்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |