ஏலத்தில் புதிய சாதனை படைத்த படேக் பிலிப் கைக்கடிகாரம்: வாங்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?
பழமை வாய்ந்த படேக் பிலிப் கைக்கடிகாரம் மீண்டும் ஏல விற்பனையில் சாதனை படைத்துள்ளது.
ஏலத்தில் புதிய சாதனை
பழமை வாய்ந்த பெர்பெச்சுவல் காலண்டர் க்ரோனோகிராஃப் ரெஃபரன்ஸ் 1518(Perpetual Calendar Chronograph Reference 1518) கைக்கடிகாரம் சுமார் 14,190,000 சுவிஸ் பிராங்குகளுக்கு(அதாவது $17.6 மில்லியன்) தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டதாக ஃபிலிப்ஸ்(Phillips) ஏல நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த கைக்கடிகாரம் ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு $11 மில்லியன் தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட பிரம்மாண்ட சாதனையை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடிகார தயாரிப்பு வரலாற்றில் தனக்கென தனி இடத்தை படேக் பிலிப் ரெஃப்.1518(Patek Philippe ref.1518) கடிகாரம் பிடித்துள்ளது.
படேக் பிலிப் நிறுவனம் மொத்தமாக 280 ரெஃப்.1518 கடிகாரங்களை தயாரித்து இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை மஞ்சள் தங்கத்திலும், இளஞ்சிவப்பு தங்கத்திலும் இருந்தன.

ஆனால் தற்போது ஏலத்தில் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ள இந்த ரெஃப்.1518 கைக்கடிகாரம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்யப்பட்டது ஆகும், இதுவே இதன் தனித்தன்மையை உயர்த்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |