இந்தியாவில் பிரிட்டிஷ் தூதரகம்... பொறுப்பும் சேவையும்
ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு வெளிநாட்டவராக இருந்து, அவரது சொந்த நாட்டின் குடிமகனகாவே நீடித்தால், தூதரகம் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.
இந்தியாவில் பிரிட்டிஷ் தூதரகம்
தூதரகம் என்பது வெளிநாட்டில் உங்களைப் பாதுகாப்பதற்கும், உங்கள் நலன்களைக் கவனிப்பதற்கும், இக்கட்டான சூழலில் உதவுவதற்கும் பொறுமான அலுவலகமாகும்.
ஒரு தூதர் அவர் வசிக்கும் நாட்டிற்கும் சொந்த நாட்டிற்கும் இடையே தூதரக உறவுகளைப் பேணுதல், நிர்வகித்தல் மற்றும் தூதரக சேவைகளை வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பாவார்.
ஒரு நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு தேவையான ஆவணங்களை வழங்குதல், சட்ட ஆதரவு மற்றும் அவசர மருத்துவ உதவிகளுக்கும் ஒரு தூதரகம் உதவலாம். அந்த வகையில், இந்தியாவில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் பிரிட்டிஷ் தூதரகமானது அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, கோவா உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தியா-பிரித்தானியா உறவுகளை மேம்படுத்துதல், பிரிட்டிஷ் குடிமக்களின் நலன்களைப் பாதுகாத்தல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்கிறது.
முக்கிய செயல்பாடுகள்
இராஜதந்திர உறவுகள்: இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளை நிர்வகிக்கிறது.
குடிமக்கள் சேவை: பிரிட்டிஷ் குடிமக்களுக்கு விசா, கடவுச்சீட்டு மற்றும் அவசர உதவிகளை வழங்குகிறது.
வர்த்தகம் மற்றும் முதலீடு: இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
பண்பாட்டு பரிமாற்றம்: கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பரிமாற்றங்களை ஏற்பாடு செய்து, இரு நாடுகளின் கலாச்சாரப் புரிதலை வளர்க்கிறது.
தூதரகங்களால் வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள்: பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், திருமணம் மற்றும் சிவில் கூட்டாண்மை உரிமங்கள், கடவுச்சீட்டு மற்றும் பிற அடையாள ஆவணங்களின் நகல்கள், குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒப்புதல் அறிக்கைகள், சட்ட ஆவணங்கள், சொத்து வாங்குவதற்கான ஆவணங்கள், வரி செலுத்துவதற்கான படிவங்கள், சேமிப்புப் பத்திரங்களின் சான்றிதழ்கள், உயில்கள் மற்றும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது உங்கள் வாக்குரிமையை பயன்படுத்த விரும்பினால் உங்கள் தூதரகம் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்கான வழிகளை உங்களுக்கு வழங்கும்.
மட்டுமின்றி, நீங்கள் வெளிநாட்டவர் வரிக்கு உட்பட்டவராக இருந்தால் - நீங்கள் வசிக்கும் நாடு உங்கள் சொந்த நாட்டோடு இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் , உங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து நீங்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டினால் - உங்கள் சொந்த நாட்டிலேயே உங்கள் வரி வருமானத்தைத் தொடர்ந்து தாக்கல் செய்ய வேண்டியிருக்கலாம்.
இதற்கான உதவிகளை தூதரக அதிகாரிகள் வழங்குவார்கள். மேலும், ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டால், கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், உங்கள் தூதரகம் உங்களைப் பார்க்க ஒரு பிரதிநிதியை அனுப்பக்கூடும்.
இது முதன்மையாக உங்கள் தடுப்புக்காவலின் போது நீங்கள் நியாயமான மற்றும் சமமான முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்வதையும், தடுப்புக்காவல் சட்டப்பூர்வமானது என்பதையும் உறுதி செய்வதாகும். உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாவிட்டால், உங்கள் தூதரகம் உங்கள் சார்பாக அவர்களைத் தொடர்பு கொள்ள முடியும்.
கடுமையான சூழ்நிலைகளில், நீங்கள் வசிக்கும் நாட்டில் உங்கள் உயிருக்கும் நல்வாழ்வுக்கும் உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் அவசரநிலை அல்லது பேரழிவு ஏற்படலாம்.
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய அளவிலான நிகழ்வு குறித்து உங்கள் தூதரகம் அறிந்திருந்தால், உங்களைப் பாதுகாக்க விரைவாகச் செயல்பட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |