லண்டனில் விவாத பொருளான ஜோடியின் திருமணம்! இப்படி செய்யலாமா மாப்பிள்ளை? வெளியான வீடியோ
பிரித்தானியாவில் மணமகன் அணிந்த திருமண ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வின் பின்னணி வெளியாகியுள்ளது.
லண்டனில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் வெந்நிற திருமண உடையில் தேவதையாய் ஜொலிக்கிறார், அருகில் இருக்கும் மணமகன், ஏதோ கல்யாண திகதியை மறந்துவிட்டு கடைசி நேரத்தில் ஓடிவந்தவர் போல மோசமான கேஷ்வல் உடையில் நின்றிருக்கிறார்.
அதே உடையில் மணப்பெண்ணுக்கும், அவருக்கும் திருமணம் நடைபெறும் வீடியோ சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை குவித்துள்ளது. அந்த வீடியோ டிக்-டாக்கில் இருந்து டெலிட் செய்யப்பட்ட போதும், சமூக ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
அந்த வீடியோவில் கேத்தரின் நிக்கல்சன் என்ற மணமகள், வெள்ளை நிறத்தில் மெர்மைட் டிசைன் வெட்டிங் கவுனில் நிற்கிறார், அருகே மணமகனோ அதற்கு அப்படியே நேர்மாறாக கறுப்பு கலர் டீ-ஷர்ட் அதில் "பாம் ஏஞ்சல்ஸ்" என்ற மோசமான லோகோ வேறு, சாயம் போன ஜீன்ஸ், அழுக்கான ஸ்னீக்கர்கள் உடன் வந்திருக்கிறார். இருவரும் பரஸ்பரம் திருமணத்திற்கான சபதங்களை ஏற்று, மோதிரம் மாற்றி கணவன், மனைவியாக மாறுகின்றனர்.
மணப்பெண்ணின் தோழியான வைலட் பிரைஸ் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த வீடியோ டிக்-டாக்கில் பதிவேற்றப்பட்டு சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மணமகன் ஏன் அப்படி இருந்தார் என்பது குறித்து பலரும் பல மாதிரியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
மாப்பிள்ளை பேச்சுலர் பார்ட்டி கொண்டாடிவிட்டு அப்படியே தூங்கிவிட்டாரா? அவருக்கு இன்று திருமணம் என தெரியுமா? தெரியாதா?’ என விமர்சித்துள்ளனர்.
கடும் விமர்சனங்கள் கிளம்பியதை அடுத்து டிக்-டாக் வீடியோவை அழித்துள்ள மணமகள் கேத்தரின் நிக்கல்சனின் தோழி வைலட், கடவுளே... அவர்களது திருமணம் முடிந்துவிட்டது. திருமணம் செய்துகொண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
அவர் எப்படி ஆடை அணிந்திருந்தார் என்பது பற்றி அவள் கவலைப்படவில்லை என சமூகவலைதளத்தில் கிண்டல் செய்து வந்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.