அப்பப்பா... இங்கிலாந்தில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கா? ஜாலியான ஒரு ட்ரிப்
உலகில் பல நாடுகள் சுற்றுலாத் துறையில் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. அந்த வகையில் இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால், அங்கே பார்க்கவேண்டிய இடங்கள் மிகவும் அதிகமாக உள்ளன.
இந்த நாடானது, வரலாற்றுக்கு முந்தைய மெகாலித்கள் முதல் பண்டைய ரோமானிய கட்டிடங்கள், இடைக்கால அரண்மனைகள், நகர மையங்கள், வரலாற்று தளங்கள் என்பவற்றால் நிறைந்துள்ளன. சரி இனி இங்கிலாந்தில் இருக்கும் சுற்றுலாத் தளங்களைப் பற்றிப் பார்ப்போம்...
லண்டன் கோபுரம்
லண்டன் டவர் என்ற கூறப்படும் இது, மிகப் பிரபலமான ஒரு இடமாகும். நாம் நினைக்கும் அளவுக்க அனைத்து வகையான அம்சங்களையும் கொண்டுள்ளது. தேம்ஸ் நதியின் இந்த கோட்டையானது, வெள்ளை கோபுரத்தை மையமாகக் கொண்டது.
image - the oklohoman
கோட்ஸ்வொல்ட்ஸ்
இது இங்கிலாந்தின் அழகிய மாவட்டங்களில் ஒன்று. இது கால்நடையை ஆராய்வதற்கான ஒரு சிறந்த இடமாகக் காணப்படுகிறது. இது சுமார் 787 சதுர மைல் பரப்பளவைக் கொண்டது.
இங்கு அமைந்துள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களின் அழகு வசீகரிக்கும் தன்மை கொண்டதாக அமைகிறது.
image - britanica
பிரிட்டிஷ் அருங்காட்சியகம்
இது பழங்கால பொருட்களை பாதுகாத்து வைத்துள்ள ஒரு இடமாகும். ஏதேன்ஸில் உள்ள பார்த்தீனானில் இருந்து எல்ஜின் மார்பிள்ஸ், ரெசெட்டா ஸ்டோன் என்பவை பழங்கால கலைப்பொருட்களாக காணப்படுகிறது. இது லண்டனில் உள்ள சிறந்த அருங்காட்சியங்களுள் ஒன்று.
image - wikipedia
கேன்டர்பரி கதீட்ரல்
கேன்டர்பரி கதீட்ரல் என்பது கிறிஸ்தவத்தவர்களின் ஒரு புனிதத் தலமாக காணப்படுகிறது. இந்த கதீட்ரல் என்பது அழகான இடைக்கால நகரத்தின் ஒரு அம்சமாகும். இது மிகவும் பாரம்பரியமான ஒரு தளமாகவும் பார்க்கப்படுகிறது.
image - trip advisor
ரோமன் குளியல்
இது பாத் நகரம் என்று கூறப்படுகிறது. இது புத்துணர்ச்சியூட்டும் வெப்ப நீரூற்றுக்களுக்கு அடுத்ததாக உள்ளது. இது சுமார் 2000 வருடங்கள் பழமையானதாகும். இதில் சுமார் ஐநூறு கட்டிடங்கள், வரலாற்று அல்லது கட்டிடக்கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
image - samarapedsovet.ru
வின்ட்சர் கோட்டை
வின்ட்சர் கோட்டை என்பது லண்டனிலிருந்து 40 நிமிட ரயில் பயணம் மற்றும் அரச குடும்பத்தின் உத்தியோகப்பூர்வ இல்லங்களில் ஒன்றாகும். தேவாலயம், ஸ்டேட் அடுக்குமாடி குடியிருப்புக்கள், குயின்ஸ் கேலரி என்பன இதற்குள் அடங்கும்.
image - history extra
ஸ்டோன்ஹெஞ்
இது இங்கிலாந்தின் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு வரலாற்று தளமாகும். இந்த அருங்காட்சியகம் மிகவும் பிரபலமானது. இது மெகாலித்களின் கட்டுமானம் மற்றும் வாழ்க்கையை ஆடியோ விஷூவல் அனுபவங்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட பழங்கால பொருள்கள் மூலம் விளக்குகிறது.
இது 4,500 வருடங்களுக்கு முன்பு கருவிகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதையும் வெளிக்காட்டுகின்றது.