பார்வையாளர் முதல் கல்வி, வேலை... பிரித்தானிய விசா குறித்த முழுமையான தகவல்
வரலாறு, கலாச்சாரம், மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் தனித்துவமான கலவையாக பிரித்தானியா விளங்குகிறது. இங்கு மதிப்புமிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட சில சிறந்த மற்றும் பழமையான கல்வி நிலையங்கள் பல செயல்பட்டு வருகிறது.
பார்வையாளராக பயணப்பட, கல்வி கற்க, அல்லது வேலை செய்ய விரும்பினால், அதற்கு சரியான விசா தேவை. அந்த வகையில் பிரித்தானிய அரசாங்கம் நான்கு வகையான விசா அனுமதியை வழங்கி வருகிறது.
1 வேலை விசா, 2 கல்வி விசா, 3. பார்வையாளர்கள் விசா, 4. போக்குவரத்து விசா, இத்துடன் குடும்ப விசாவும் சிறார்களுக்கான விசாவும் வழங்கி வருகிறது.
பிரித்தானிய விசாவின் சிறப்பம்சங்கள்:
பிரித்தானிய விசாவுடன் ஸ்கொட்லாந்து, வேல்ஸ், மற்றும் வடக்கு அயர்லாந்திற்குச் செல்லலாம். வழக்கமான பார்வையாளர் விசாவை ஆறு மாதங்கள் அல்லது 11 மாதங்களுக்குப் பெறலாம். நிரந்தர குடியிருப்பு மற்றும் குறுகிய காலத்திற்கு என பிரித்தானியா அரசாங்கம் விசா வழங்கி வருகிறது. நீண்ட கால தனித்துவமான பார்வையாளர் விசாவை இரண்டு, ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளுக்குப் பெறலாம்.
1. வேலை விசா:
இந்த வகையான விசா, ஒரு பிரித்தானியர் அல்லாத நாட்டவர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய அனுமதிக்கிறது. இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 945 பவுண்டுகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 90 நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட சில நாட்டவர்கள் பிரித்தானிய வேலை விசாவைப் பெறுவதற்கு கூடுதலாக சுகாதாரக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். பிரித்தானியாவில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த வகையான விசாவிற்கு விண்ணப்பிக்கலாம், அவர்கள் ஒவ்வொருவரும் விண்ணப்பிக்கும் போது குறைந்தது 630 பவுண்டுகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வைத்திருந்தால் போதும்.
2. கல்வி விசா:
பிரித்தானியர் அல்லாத ஒருவர் இங்கிலாந்தில் படிக்க விரும்பினால், அவர்கள் கல்வி விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். பிரித்தானியாவில் பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்தில் குறுகிய அல்லது நீண்ட காலம் படிக்க விரும்பும் சிறார்கள் மற்றும் பெரியவர்கள் இரு தரப்பினரும் இந்த மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விசா மூலம், மாணவர்கள் தங்கள் பாடத் தேவைகளின் ஒரு பகுதியாக ஆராய்ச்சி செய்யலாம்.
2.1. மாணவர் விசா:
சிறார் ஒருவர் 4 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவராக இருந்தால் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இந்த விசா வைத்திருப்பவர்கள் சில சூழ்நிலைகளில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ வேலை செய்யலாம். பிரித்தானியாவில் சிறார் மாணவர் விசாவின் காலம் நீட்டிக்க செய்யலாம்.
3. பார்வையாளர்கள் விசா:
பிரித்தானியர் அல்லாத ஒருவர் இந்த வகையான விசாவுடன் இங்கிலாந்தில் நுழையலாம், தங்கலாம் மற்றும் பயணிக்கலாம். ஓய்வு, வணிகம், மருத்துவ சிகிச்சை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான சந்திப்புகள், விளையாட்டுகளில் பங்கேற்பது அல்லது பிற கலாச்சார நடவடிக்கைகளுக்காக இங்கிலாந்து செல்லும் நபர்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.
4. போக்குவரத்து விசா:
இந்த விசாவானது ஒரு வெளிநாட்டவரை பிரித்தானிய விமான நிலையங்களின் சர்வதேச போக்குவரத்துப் பிரிவுகள் வழியாக அனுப்ப அனுமதிக்கிறது. இந்த விசா இரண்டு வகையானது, அதாவது, Visitor in Transit visa மற்றும் Direct Airside Transit Visa (DATV).
வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க:
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, நிதி ஸ்திரத்தன்மைக்கான சான்று, விண்ணப்பதாரரின் ஸ்பான்சர்ஷிப் சான்று, ஆங்கிலப் புலமை குறித்த சான்று, குற்றவியல் தண்டனை குறித்த அறிக்கை எதுவும் இருக்குமாயின் அதுவும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
பார்வையாளர் விசாவுக்கு விண்ணப்பிக்க:
செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, நிதி ஸ்திரத்தன்மைக்கான சான்று, தேவையெனில் முன்பு வழங்கப்பட்ட கடவுச்சீட்டைச் சமர்ப்பிக்கவும், விண்ணப்பதாரரின் வேலை மற்றும் கல்வி விவரங்கள், ஸ்பான்சரின் நிதி ஆவணம், சுயதொழில் செய்யும் விண்ணப்பதார் என்றால், பதிவுசெய்யப்பட்ட வணிகம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், பிரித்தானிய வணிக உரிமையாளரின் கடிதம் மற்றும் ஆவணங்கள் போன்ற வணிக பயணத்திற்கான சான்றுகளும் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி விசாவுக்கு விண்ணப்பிக்க:
காசநோய் பரிசோதனை அறிக்கை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, நிதி ஸ்திரத்தன்மைக்கான சான்று, ஆங்கில புலமைக்கான சான்றிதழ், பிரித்தானியாவில் தங்குமிடத்திற்கான ஆவணங்கள், விண்ணப்பதாரரின் கல்வி தொடர்பான ஆவணங்கள், ஸ்பான்சரின் நிதி நிலை மற்றும் தொழில் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். சிறார் என்றால், சட்டப்பூர்வ பாதுகாவலர் அல்லது பெற்றோரின் ஒப்புதல் கடிதம் வேண்டும்.
விசா செல்லுபடியாகும் காலம்:
போக்குவரத்து விசா என்பது 24 முதல் 48 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். பொதுவான பார்வையாளர் விசா என்றால் 6 மாதங்கள் வரையில் செல்லுபடியாகும். கல்வியாளர்கள் என்றால் ஓராண்டு காலம், மருத்துவ சிகிச்சை என்றால் 11 மாதங்கள்.
வேலை விசா என்றால் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும். ஆனால் வீட்டு வேலைக்கான ஊழியர் என்றால் 6 மாதங்கள் வரையில் செல்லுபடியாகும். வெளிநாட்டு வணிக விசாவின் பிரதிநிதி என்றால் 3 ஆண்டுகள் வரையில் செல்லுபடியாகும். பொதுவாக மாணவர் விசா என்றால், 6 மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் நீட்டித்துக் கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |