அமெரிக்காவின் முழு வரலாறு: சுதந்திரம் முதல் ட்ரம்ப் வரை
வல்லாதிக்க நாடான அமெரிக்காவின் வரலாறு மற்றும் மக்களின் வாழ்க்கை குறித்து இங்கே காண்போம்.
சர்வ வல்லமை கொண்டான நாடான அமெரிக்கா, வட அமெரிக்க கண்டத்தின் முகமாக உள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவர் பொறுப்பேற்க உள்ள கால இடைவெளியில் ஜோ பைடன் எடுக்கும் முடிவுகள் அமெரிக்க அரசியலை பரபரப்பாக வைத்துள்ளன.
மக்களின் முதல் வருகை
இன்றைய அமெரிக்க நிலப்பரப்பிற்கு, கிமு 15,000யில் மக்களின் முதல் வருகை தொடங்கியதாக கூறப்படுகிறது.
இங்கு மனித நாகரீக வளர்ச்சிக்கு பின், 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட அமெரிக்காவின் ஐரோப்பிய காலனித்துவம் தொடங்கிய பின்னர், போர்கள் மற்றும் தொற்றுநோய்கள் பழங்குடி சமூகங்களை அழித்தன.
ஆங்கிலேயர்கள் 1585யில் தொடங்கி அட்லாண்டிக் கடற்கரையை காலனித்துவப்படுத்தினர். மேலும் 1760களில் அமெரிக்க நிலப்பரப்பில் 13 பிரித்தானிய காலனிகள் நிறுவப்பட்டன.
அத்துடன் தென் காலனிகள் அடிமைத் தொழிலில் விவசாய அமைப்பை உருவாக்கி, ஆப்பிரிக்காவில் இருந்து மில்லியன் கணக்கானவர்களை அடிமைப்படுத்தினர்.
அமெரிக்கா வெற்றி
அடுத்த 16 ஆண்டுகளில், அதாவது 1776ஆம் ஆண்டு அமெரிக்கா தனது சுதந்திரத்தை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 1783யில் நடந்த புரட்சிப்போரில் ஜெனரல் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் அமெரிக்கா வெற்றி பெற்றது.
அதன் பின்னர் 1789ஆம் ஆண்டில் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1791யில் பிரிக்க முடியாத உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்க உரிமைகள் மசோதா சேர்க்கப்பட்டது.
முதல் ஜனாதிபதியாக வாஷிங்டன் மற்றும் அவரது ஆலோசகர் அலெக்ஸாண்டர் ஹாமில்டன் இருவரும் வலுவான மத்திய அரசாங்கத்தை உருவாக்கினர்.
1803ஆம் ஆண்டில் லூசியானாவை பெற்றதன் மூலம் அமெரிக்க நிலப்பரப்பு பசிபிக் கடற்கரைக்கு விரிவடைந்தது.
வலுவான அரசு
1860யில் ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாக தெரிவான பின்னர், தென் மாநிலங்கள் யூனியனில் இருந்து பிரிந்து அமெரிக்காவின் அடிமைத்தனத்திற்கு ஆதரவான கூட்டமைப்பு மாநிலங்களை உருவாக்கியது. இதனால் உள்நாட்டு போர் தொடங்கியது.
ஆயினும், 1865ஆம் ஆண்டில் கூட்டமைப்புகளின் தோல்வியால் அடிமைத்தனம் ஒழிய வழிவகுக்கப்பட்டது. பின்னர் தேசிய அரசாங்கம் மிகவும் வலுவாக வெளிப்பட்டது.
மேலும் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வெளிப்படையான கடமையைப் பெற்றது. அமெரிக்கா உலகின் முன்னணி தொழில்துறை சக்தியாக 20ஆம் நூற்றாண்டில் மாறியது.
முதலாம் உலகப் போரின்போது அமெரிக்கா ஆரம்பத்தில் நடுநிலை வகித்தது. பின்னர் நேச நாடுகளுடன் இணைந்து 1917யில் ஜேர்மனி மீது போரை அறிவித்தது.
ஆனாலும், இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் அணு ஆயுதங்களை அமெரிக்கா பயன்படுத்தியது உலகளவில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
வல்லரசு
சோவியத் யூனியனுடன் பனிப்போர் தொடங்கிய நிலையில் அமெரிக்கா வல்லரசாக உருவெடுத்தது.
சோவியத் யூனியன் ரஷ்யாவான பிறகும் இரு நாடுகளுக்கு இடையே ஆயுதப்போட்டி, விண்வெளி ஆராய்ச்சி என போட்டிகள் இன்றுவரை நீடிக்கின்றன.
1960களில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமைகளை அமல்படுத்திய அமெரிக்கா, 21ஆம் நூற்றாண்டில் பெரும் மந்தநிலை மற்றும் கோவிட் தொற்றுநோயால் எதிர்மறையாக பாதிக்கப்பட்டது.
தற்போது எலான் மஸ்க்கின் ராக்கெட் புரட்சியால், அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி உலகிற்கே சவால் விடுக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |