அமெரிக்காவில் வேரூன்றி நிற்கும் தமிழர்கள்.! பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு...
அமெரிக்காவில் தமிழர்களின் வரலாறு 1960-களில் தொடங்கியது.
அப்போது, இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பல தமிழ் வம்சாவளியினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நாடி அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
1980-களின் பிற்பகுதியில், இலங்கை உள்நாட்டு போரால் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூக விளைவுகளால், இலங்கை தமிழர்கள் அமெரிக்காவுக்கு அதிகமாக புலம்பெயர ஆரம்பித்தனர்.
கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகள்
அமெரிக்கா, உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதனால், பல தமிழ் மாணவர்கள், IIT போன்ற முக்கிய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றுக்கொண்டு, அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தனர்.
குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் தமிழ் வம்சாவளியினர் அமெரிக்காவில் முன்னிலை வகிக்கின்றனர்.
மக்கள் தொகை
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் எண்ணிக்கை ஓவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
2020-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, அமெரிக்காவில் சுமார் 300,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசித்து வருகின்றனர். அதில் 1.5 லட்சத்திற்கும் மேல் இலங்கைத் தமிழர்கள் என கூறப்படுகிறது.
இவர்கள் பெரும்பாலும் நியூ யார்க், கனெட்டிகட், கலிபோர்னியா, மற்றும் டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் அதிகமாக குடியேறியுள்ளனர்.
அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் 2012-2016 அமெரிக்க சமூக கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 238,699 பேர் வீட்டில் தமிழ் பேசுவதாக தெரியவந்தது.
சமூக மற்றும் கலாச்சார பங்களிப்பு
அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தமிழர்கள், தங்கள் பாரம்பரியத்தை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.
தமிழ்ப் பள்ளிகள், கலாச்சார மையங்கள், தமிழர் திருநாள்கள் மற்றும் திருவிழாக்கள் மூலம் தங்கள் மரபைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
தமிழ்ச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் மூலம், சமூக சேவை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொருளாதார பங்களிப்பு
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வணிக துறைகளில் முக்கிய பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்
இவர்களின் கடின உழைப்பாலும், திறமையாலும், பல தொழில்துறைகளில் முன்னேறி, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
பாரம்பரியத்தை மறக்காமல் இணைந்துள்ளனர்
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், தங்கள் மூலமாக தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி மற்றும் வாழ்க்கை தரம் வழங்குகின்றனர்.
இவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறக்காமல், அமெரிக்க வாழ்க்கை முறையோடும், பண்பாட்டு முறைமைகளோடும் சிறப்பாக இணைந்துள்ளனர்.
அமெரிக்காவில் தமிழர்கள் தங்கள் உழைப்பாலும், திறமையாலும், சமூகத்தின் முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகின்றனர். தங்கள் பண்பாட்டை தக்கவைத்துக்கொண்டு, தொழில்நுட்பம், கல்வி மற்றும் வணிக துறைகளில் வெற்றி அடைந்து, அமெரிக்காவில் தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |