முகமூடி அணிந்து பட்டப்பகலில்... பொலிசார் வெளியிட்ட உறையவைக்கும் சம்பவம்: வெகுமதி அறிவிப்பு
நியூயார்க் நகரில் பட்டப்பகலில் UnitedHealthcare தலைமை நிர்வாக அதிகாரியை முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபரால் படுகொலை
உள்ளூர் நேரப்படி, புதன்கிழமை பகல் சுமார் 6.45 மணியளவில் குறித்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. 50 வயதான Brian Thompson முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் பொருட்டு ஹொட்டல் ஒன்றில் நடந்து செல்லும் நிலையில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க் ஹில்டன் ஹொட்டலுக்கு சென்ற பிரையன் தாம்சனை பின்னால் இருந்து பலமுறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த நபர் சம்பவயிடத்தில் இருந்து தப்பியுள்ளார்.
சம்பவம் நடந்த அடுத்த நொடி அந்த முகமூடி அணிந்த கொலைகாரன் மாயமானதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுமார் ஆறடி உயரமும், மெலிதான உடல்வாகும் கொண்டவர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நியூயார்க் முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொலைகாரன் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10,000 டொலர் வெகுமதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில்
அமெரிக்காவின் மிகப்பெரிய சுகாதார நிறுவனம் ஒன்றை வழிநடத்தி வந்தவர் தாம்சன். இதுவே அவரை ஆபத்தில் சிக்க வைத்துள்ளதாக அவரது மனைவி அச்சம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அச்சுறுத்தல் இருந்ததாகவும், அடிப்படையில் விரிவான தகவல் எதுவும் தமக்கு தெரியவில்லை என்றும் தாம்சனின் மனைவி குறிப்பிட்டுள்ளார். ஹில்டன் ஹொட்டலில் முன்னெடுக்கப்படும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 8 மணிக்கு கலந்துகொள்ளும் பொருட்டு தாம்சன் மினசோட்டாவில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது பாதுகாப்பு இல்லாமல் தான் தங்கியிருந்த ஹொட்டலில் இருந்து நடந்து சென்றுள்ளார். இந்த நிலையிலேயே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதுவரை, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கண்டுபிடிக்கும் முயற்சியில், ஒரு சந்துப் பாதையில் கைவிடப்பட்ட செல்போனை பொலிசார் மீட்டுள்ளனர். இது திட்டமிடப்பட்ட கொலையா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |