பிரித்தானியாவில் 15 வயது டீன் ஏஜ் பெண் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்
பிரித்தானியாவில் மாயமான டீன் ஏஜ் பெண்ணை தேடும் காவல்துறையினர்.
அவர் தொடர்பிலான முக்கிய தகவல்களை வெளியிட்டு வைத்துள்ள கோரிக்கை.
பிரித்தானியாவில் காணாமல் போன 15 வயது டீன் ஏஜ் பெண் குறித்து பொலிசார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
Kaitlin McClennon (15) என்பவர் கடந்த 1ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு கடைசியாக Cheshire கவுண்டியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். ஹால்டன் மருத்துவமனையில் அருகே காணப்பட்ட அவர் பிறகு காணாமல் போயுள்ளார்.
Kaitlin நீண்ட பொன்னிற முடியுடன் மெலிதான உடல்வாகுடன் இருப்பதாக விவரிக்கப்படுகிறார். அவர் கடைசியாகக் காணப்பட்டபோது அவள் கருப்பு நிற ஆடைகள் மற்றும் கோல்ட் ஹை டாப் பூட்ஸ் அணிந்திருந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Cheshire Police
Kaitlin, Wirral ம்ற்றும் Liverpool பகுதிகளில் கூட இருக்க வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிசாரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.