மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு உதவித்தொகை: முதல் தவணை தொடக்கம்
பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ள 900 பவுண்டுகள் உதவித்தொகையில் முதல் தவணை இன்று மில்லியன் கணக்கான பிரித்தானியர்களுக்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முதல் தவணையாக 301 பவுண்டுகள்
வாழ்க்கைச் செலவுக்கான உதவித்தொகை என சுமார் 8 மில்லியன் தகுதி வாய்ந்த பிரித்தானியர்களுக்கு முதல் தவணையாக 301 பவுண்டுகள் அளிக்கப்பட உள்ளது. இதற்கு என தனியாக மக்கள் எவரும் விண்ணப்பிக்க தேவையில்லை.
More than 8 million low-income families are set to receive £301 to help with the cost of living, with the first payments starting today
— Department for Work and Pensions (@DWPgovuk) April 25, 2023
For more information, visit https://t.co/DSwWwJ0kbY#HelpForHouseholds pic.twitter.com/Oz3oDqeVuX
இரண்டாவது தவணையாக 299 பவுண்டுகளும் மூன்றாவது தவணையாக 300 பவுண்டுகளும் அளிக்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியர்களுக்கு உதவும் பொருட்டு இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட சில உதவிகளை பெறும் பிரித்தானிய மக்களுக்கே இந்த விலைவாசி உயர்வு உதவித்தொகையானது வழங்கப்பட உள்ளது. அதாவது, வருமானம் சார்ந்த வேலை தேடுவோருக்கான கொடுப்பனவு, வருமானம் தொடர்பான வேலைவாய்ப்பு மற்றும் ஆதரவு கொடுப்பனவு மற்றும் Pension credit, Child tax credit, Working tax credit மற்றும் Universal Credit ஆகியவற்றில் ஒன்றிலேனும் உதவி பெற நீங்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
வங்கிக் கணக்கில் தானாகவே செலுத்தப்படும்
இந்த 301 பவுண்டுகள் தொகையானது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் தானாகவே செலுத்தப்படும். மேலும் ஒரு சிறப்பு குறியீட்டுடன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதால், இது அரசாங்க உதவித்தொகை என அடையாளம் காணலாம்.
அதாவது DWP COLP என்ற குறியீட்டுடன் உங்கள் தேசிய காப்பீட்டு எண் இணைக்கப்பட்டிருக்கும். மேலும், child tax credit மற்றும் working tax credit உதவி பெறுபவர்களுக்கு இந்த 301 பவுண்டுகள் உதவித்தொகையானது கொஞ்சம் தாமதமாக வழங்கப்பட உள்ளது.
சுமார் 8 மில்லியன் பிரித்தானியர்கள் இன்று முதல் இந்த வாரம் 301 பவுண்டுகள் உதவித்தொகை பெறும் நிலையில், அரசாங்கத்திடம் இருந்து 12 வகையான உதவித்தொகை பெறும் பிரித்தானியர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளனர்.
@thesun