இந்தியாவின் முதல் யுனிவெர்சல் தீம் பார்க் - எந்த நகரத்தில் தெரியுமா?
அமெரிக்கா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தீம் பார்க்களை திறந்துள்ள Universal நிறுவனம், தனது முதல் தீம் பார்க்கை இந்தியாவில் திறக்க உள்ளது.
இதற்காக யுனிவெர்சல் நிறுவனம், இந்தியாவின் பாரதி ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவில் யுனிவெர்சல் தீம் பார்க்
டெல்லி விமான நிலையத்திற்கு அருகே, பாரதி ரியல் எஸ்டேட் நிறுவனம் 3 மில்லியன் சதுர அடி பரப்பளவில் பெரிய மால் ஒன்றை அமைத்து வருகிறது.
இதில், 10%(3,00,000 சதுர அடி) பகுதி யுனிவெர்சல் தீம் பார்க்கிற்கு ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமான வெளிப்புற தீம் பூங்காக்களுக்கு மாறாக, இது இந்தியாவின் முதல் உட்புற(indoor) தீம் பார்க்காக இருக்கும் என கூறப்படுகிறது.
2027 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த தீம் பார்க் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் யுனிவர்சல் ஸ்டுடியோஸின் அறிமுகம் தீம் பார்க் அனுபவங்களை உயர்த்தும் மற்றும் இந்திய பொழுதுபோக்கு வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.