18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள்
அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான சாக் யாதேகரி (Zach Yadegari) என்பவர், Cal AI என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
Cal AI என்னும் செயலியானது, நாம் சாப்பிடும் உணவை ஸ்கேன் செய்தால், AI தொழில்நுட்ப உதவியுடன் அந்த உணவில் எவ்வளவு கலோரி மற்றும் ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை என்பதை சொல்லிவிடும்.
இந்த நிறுவனம், ஆண்டுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்(இந்திய மதிப்பில் ரூ.256 கோடி) வருமானம் ஈட்டுவதாக சாக் யாதேகரி தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் நிராகரிப்பு
இந்நிலையில், தான் படிக்க விரும்பி பல்வேறு பிரபல பல்கலைக்கழகங்களில் விண்ணப்பத்த போது, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக சாக் யதேகரி தெரிவித்துள்ளார்.
18 years old
— Zach Yadegari (@zach_yadegari) April 1, 2025
34 ACT
4.0 GPA
$30M ARR biz
Stanford ❌
MIT ❌
Harvard ❌
Yale ❌
WashU ❌
Columbia ❌
UPenn ❌
Princeton ❌
Duke ❌
USC ❌
Georgia Tech ✅
UVA ❌
NYU ❌
UT ✅
Vanderbilt ❌
Brown ❌
UMiami ✅
Cornell ❌
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எம்ஐடி, யேல், ஹார்வர்ட், ஸ்டான்போர்ட், கொலம்பியா உள்ளிட்ட பிரபல கல்வி நிறுவனங்கள் தனது விண்ணப்பத்தை நிராகரித்ததாக தெரிவித்துள்ளார்.
இளவயதிலே இத்தனை திறமைகள் உள்ள நபரின் விண்ணப்பத்தை, பல்கலைக்கழகங்கள் நிராகரித்தது ஏன் என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
7 வயதிலே கோடிங் எழுத கற்றுக்கொண்ட சாக் யாதேகரி, 12 வயதில் தனது முதல் செயலியை உருவாக்கியுள்ளார். மேலும், 14 வயதில் ஆண்டுக்கு 60,000 வருமானம் தரக்கூடிய கேமிங் இணையதளத்தை நடத்தி வந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |