ஹமாஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட விரிவுரையாளர்: சுவிஸ் பல்கலை அதிரடி
இஸ்ரேலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்த ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்த விரிவுரையாளர் ஒருவரை, சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்று பணியிடைநீக்கம் செய்துள்ளது.
சுவிஸ் பல்கலை அதிரடி
Bern பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸில் இரண்டு செய்திகளை வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள இயலாதவை என்று கூறியுள்ள Bern பல்கலை, அந்த விரிவுரையாளரை பணியிடைநீக்கம் செய்துள்ளது.
அவரது கருத்துக்கள் எக்ஸிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன.
அவரது கருத்துக்கள் சட்டத்தை மீறியிருக்கலாம் என்னும் கோணத்தில் சுவிஸ் அதிகாரிகளால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், பல்கலை இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்நிலையில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அந்த விரிவுரையாளர், பொதுமக்கள் மீதான வன்முறை மற்றும் யூதர்கள் மீதான தாக்குதல்களை நான் எப்போதும் கடுமையாக விமர்சித்திருக்கிறேன் என்றும் சித்தாந்த காரணங்களுக்காக, ஹமாஸ் மற்றும் அதுபோன்ற குழுக்களின் கொள்கைகளை நான் அடிப்படையில் நிராகரிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளர்.
சம்பந்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |