குளியலறையில் மொபைலை மறைத்து வைத்து படமெடுத்த மாணவர்... புகாரளித்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த ஏமாற்றம்
கனடாவில் குளியலறையில் மொபைலை மறைத்துவைத்து படம் எடுத்த மாணவர் ஒருவர் சிக்கிய நிலையில், வழக்கை விசாரித்த பொலிசாரின் நடவடிக்கை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan பல்கலைக்கழகத்தில் பயில்பவர் Taylor என்ற மாணவி.
அவர் குளியலறையை பயன்படுத்தும்போது, Sari Siyam என்ற மாணவர் அவருக்கு தெரியாமல் தனது மொபைலை வைத்து Taylorஐ படம் பிடித்துள்ளார்.
அதை தற்செயலாக கவனித்துவிட்ட Taylor, அவரை கையும் களவுமாக பிடித்துவிட்டார். ஆனால், இந்த வழக்கை விசாரித்துவந்த பொலிசாரான Const. Ryan Routley, திடீரென பின்வாங்கியுள்ளார்.
Siyam நல்ல பையன், அவன் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன், அவனுக்கும் ஒரு காதலி இருக்கிறாள், அவன் ஒரு பொறியியல் மாணவன், இப்போது அவன் மீது புகார் வந்தால் அவனுக்கு வேலையே கிடைக்காது என்றெல்லாம் கூறத்தொடங்கியுள்ளார் அந்த பொலிசார்.
அதற்கு பிறகு வழக்கு தொடர்பாக பேசுவதற்காக அவரை அழைத்தாலோ, குறுஞ்செய்தி அனுப்பினாலோ அந்த பொலிசார் பதிலளிப்பதில்லையாம். குழம்பிப்போய், சரி, இனி வழக்கைத் தொடரவேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டாராம் Taylor.
ஆனால், பல்கலைக்கழக ஊழியர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவே, தற்போது Capt. Tania Carroll என்னும் மற்றொரு பொலிசார் அந்த வழக்கை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
ஆகவே, Siyam மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.