சுவிட்சர்லாந்தில் அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்
சுவிட்சர்லாந்தின் சோலோதர்ன் மாநிலத்தில் ஆரே ஆற்றின் கரையில் அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை பகல் அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பொலிசார், ஆரே ஆற்றின் கரையில் இருந்து அழுகி உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இதனிடையே, குறித்த நபரின் அடையாளத்தை தெளிவுபடுத்துவதற்காக தடயவியல் மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், மரணத்திற்கான காரணம் மற்றும் எதனால் மரணம் ஏற்பட்டது உள்ளிட்ட காரணங்களை பொலிசார் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை.
தற்போது இந்த வழக்கு தொடர்பில் சோலோதர்ன் மாநில பொலிசார் மற்றும் அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.