மக்காச் சோளத்தினை அதிகளவு சாப்பிடுவதனால் இந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாம்! உஷாரா இருங்க
Weight Loss
Constipation
Dental Problem
Diabetes
By Kishanthini
தானிய வகைகளில் மக்காச்சோளம் பிரபல்யமானதாகும்.
இதனை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
மக்காச் சோளத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்கள் உள்ளன.
இருப்பினும் மக்காச் சோளத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது சில பக்க விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.
தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- உடலில் ஏற்படும் நியசின் சத்து குறைபாடு தான் பெல்லாக்ரா என்று அழைக்கப்படுகிறது. மக்காச் சோளம் பெல்லாக்ராவை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பிரச்சனை இருப்பவர்கள் மக்காச்சோளத்தை எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மக்காச் சோளத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவாக சேர்க்கலாம்.
- மக்காச் சோளத்தை உட்கொள்ளும் போது அது பெரிய குடலில் உடைந்து அதிக வாயுவை உற்பத்தி செய்கிறது. சோளத்தை அதிகளவு உட்கொள்வது வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்துகிறது.
- மக்காச்சோளத்தில் நார்ச்சத்துக்களை உள்ளடக்கியது. நார்ச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை அதிகளவில் சாப்பிடுவது அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிடிப்புக்கு வழி வகுக்கும்.
- மக்காச்சோளம் எடுத்துகொண்ட பிறகு உங்களுக்கு வயிற்றுப் போக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள். அதே நேரம் மக்காச்சோளத்தை அதிகம் எடுப்பதை தவிருங்கள்.
- மக்காச்சோளத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் பல் சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது.
- எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை இருப்பவர்கள் மக்காச்சோளத்தை அதிமாக எடுக்க கூடாது.
- மக்காச் சோளத்தை அதிகமாக சாப்பிடுவது உங்கள் எடையை அதிகரிக்க வழி வகுக்கும். எடை அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் மக்காச்சோளத்தை தவிர்ப்பதே நல்லது.
- மக்காச்சோளத்தில் போதுமான அளவு மாவுச்சத்து உள்ளது. இந்த ஸ்டார்ச் மாவுச்சத்து தூக்கத்தை ஏற்படுத்தும். இது சோம்பலுக்கு வழி வகுக்கிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US