தந்தை மடியில் அமர்ந்து கார் ஓட்டிய 4 வயது சிறுவன்: பொலிசாரைக் கண்டதும் தந்தை செய்த செயல்
ஜேர்மன் நகரமொன்றில் சிறுவன் ஒருவன் தன் தந்தையின் மடியில் அமர்ந்து காரை செலுத்திக்கொண்டிருப்பதைக் கண்ட பொலிசார் ஒருவர் காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
பொலிசாரைக் கண்டதும் தந்தை செய்த செயல்
ஜேர்மனியிலுள்ள Querfurt என்னுமிடத்தில், 4 வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையின் மடியில் அமர்ந்து காரை செலுத்திக்கொண்டிருப்பதைக் கண்ட போக்குவரத்துப் பொலிசார் ஒருவர் காரை தடுத்து நிறுத்தியுள்ளார்.
அவர் அந்த பையனின் தந்தையிடம் விசாரிக்க முயலும்போது, திடீரென அவர் காரை வேகமாக இயக்கியுள்ளார்.
அந்த பொலிசார் சட்டென காரின் கதவைப் பிடித்துக்கொள்ள, அந்த காரின் சாரதியோ காரை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக இயக்கியுள்ளார்.
சுமார் 20 மீற்றர் தூரம் சென்றதும் பொலிசாரின் பிடி நழுவ, நடுரோட்டில் விழுந்துள்ளார் அவர்.
விழுந்ததில் அந்த பொலிசாருக்கு தலையிலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பின்னர், அந்த 46 வயது சாரதியை தேடி அவரது வீட்டில் கண்டுபிடித்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள, அவரிடமே கார் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
பொலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |