ரூ.30,800 கோடிக்கு சொந்தக்காரர்.., சிறிய முயற்சியில் தொடங்கி பெரிய வெற்றியை அடைந்தவர்
2024 -ம் ஆண்டில் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த நிர்மல் குமார் என்பவரை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
யார் அவர்?
ஹரியானாவின் குருகுராம் பகுதியில் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் நிர்மல் குமார். இவர் 2024 -ம் ஆண்டில் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
இவர், UNO MINDA LTD நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 68 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதாவது, தற்போது இவர் 30,800 கோடி மதிப்பிலான சொத்துக்கு சொந்தக்காரராக உள்ளார். இவரின் UNO MIND நிறுவனமானது வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது.
முதலில் சிறிய வொர்க்ஷாப்பாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது ரூ.66 ,094 கோடி மதிப்பில் உயர்ந்துள்ளது.
கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான பாகங்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனத்தை கடந்த 1958 -ம் ஆண்டில் நிர்மல் குமாரின் தந்தை தொடங்கியுள்ளார்.
அப்போது, டெல்லியில் ஒரு சிறிய வொர்க்ஷாப்பாக தான் தொடங்கப்பட்டது. மேலும், முதன்முதலாக மோட்டார் சைக்கிள்களுக்கு தேவையான பாகங்களை தயாரித்தனர்.
இதையடுத்து, கடந்த 1977-ம் ஆண்டில் தனது தந்தையுடன் சேர்ந்து தொழிலில் இறங்கினார். பின்னர், தனது நிறுவனத்தை பல்வேறு மாநிலங்களில் விரிவுபடுத்தினார். அதன்படி, தற்போது உலகம் முழுவதும் 73 இடங்களில் உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |