பிரித்தானியாவில் வரலாறு காணாத குளிர்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
பிரித்தானியாவில் வரலாறு காணாத குளிர் நிலவி வருவதால், சில பகுதிகளில் மைனஸ் 23 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கிடையே, கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த கவனமுடனும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகரான லண்டன், பெரமர், அபெர்டீன்ஷைர் போன்ற பகுதிகளில் உறைபனி போன்ற குளிர் பிரதேசமாக மாறியுள்ளது.
அங்கு மைனஸ் 23 டிகிரி செல்சியஸ் என்ற வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல், லண்டனை அடுத்துள்ள கென்ட் மற்றும் டோவர் பகுதிகளில் மைனஸ் 20 டிகிரி குளிர் நிலவுவதால், நூற்றுக்கணக்கான வாகன ஊர்திகள் பனியில் மாட்டிக்கொண்டுள்ளன.
இந்த கடும் குளிர் மேலும் சில நாட்கள் நீடிக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது லண்டனில் பதிவாகியுள்ள மைனஸ் 23 டிகிரி குளிரானது 1995-ஆம் ஆண்டுக்கு பின் அதிகளவு குளிராக பதிவாகியுள்ளது.
மேலும், 1955-ஆம் ஆண்டு நிலவிய குளிருக்கு இணையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
