பெற்றோர் இல்லாமல் தனியாக சாப்பிடும் குட்டி இளவரசர்கள்: ராஜகுடும்ப சமையல் கலைஞர் கூறும் ரகசியம்
கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில்கூட, பிரித்தானிய இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரின் பிள்ளைகள் தனியாகத்தான் சாப்பிடவேண்டும் என்னும் விதி உள்ளதாக ராஜகுடும்ப சமையல் கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனியாக சாப்பிடும் குட்டி இளவரசர்கள்
ஆம், வில்லியம் கேட் தம்பதியரின் பிள்ளைகளான ஜார்ஜ் (12), சார்லட் (10) மற்றும் லூயிஸ் (7) ஆகியோருக்கு, பெரியவர்களுடன் அல்லது தங்கள் பெற்றோருடன் கூட சேர்ந்து சாப்பிட அனுமதி கிடையாதாம்.

அதாவது, பெரியவர்களுடன் அமர்ந்து சாப்பிடும்போது நாகரீகமாக பேசும் கலையைக் கற்றுக்கொள்ளும்வரை அவர்கள் தங்கள் பெற்றோருடன்கூட சேர்ந்து சாப்பிட முடியாதாம். தனியாகத்தான் சாப்பிடவேண்டுமாம்.
கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களிலும் இந்த விதி உறுதியாக பின்பற்றப்படும் என்கிறார் 15 ஆண்டுகளாக ராஜகுடும்பத்துக்கு உணவு பரிமாறும் சமையல் கலை நிபுணரான டேரன் மெக்கிரேடி (Darren McGrady).

இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சிறுபிள்ளைகளாக இருந்தபோதும் இதே கட்டுப்பாடுதான் என்று கூறும் டேரன், அவர்களை கவனித்துக்கொள்ளும் ஆயாக்கள்தான் (Nanny) அவர்களை சாப்பிடவைப்பார்கள் என்னும் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |