அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஒரு அசாதாரண தொலைபேசி அழைப்பு: அழைத்தவர் யார் தெரியுமா?
அவ்வப்போது முட்டிக்கொள்ளும் அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஒரு அபூர்வ அழைப்பு வந்துள்ளது.
குறிப்பாக ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருக்கும்போது, அவரும் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானும் ஒட்டிக்கொள்வதையும் முட்டிக்கொள்வதையும் உலகமே கவனித்துள்ளது.
இரு நாடுகளுக்குமான உறவு அப்படியிருக்கும் நிலையில், இப்போது மேக்ரானை தொலைபேசியில் அழைத்தவர், அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்! அதேபோல், அமெரிக்க துணை ஜனாதிபதி ஒருவர் வெளிநாட்டு தலைவர் ஒருவரை தொலைபேசியில் அழைப்பதும் அபூர்வம்தான்... அப்படிப்பட்ட ஒரு அபூர்வ தொலைபேசி அழைப்பில் கமலா ஹாரிஸும் மேக்ரானும் கொரோனா முதல் சீதோஷ்ண மாற்றம் வரை பல்வேறு விடயங்கள் தொடர்பாக விவாதித்ததாக தெரிகிறது.
கமலா ஹாரிஸ், பாலின சமத்துவம் மற்றும் விரைவில் செயலாக்கப்பட உள்ள நாசாவின் செவ்வாய்க்கிரக திட்டத்தில் பிரான்சின் பங்களிப்பு ஆகியவற்றிற்காக மேக்ரானுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.