தடுப்பூசி போடாதவர்கள் சிகிச்சைக்கான பணம் செலுத்த வேண்டும்: கொதிப்பில் சுவிஸ் மக்கள்
சுவிட்சர்லாந்தில் டெல்டா மாறுபாடு காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசியல்வாதிகள் சிலர் முன்வைத்த கோரிக்கை கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் டெல்டா மாறுபாட்டால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும், தடுப்பூசி போடும் திட்டம் முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சுவிஸில் தடுப்பூசி கட்டாயம் என்ற போதும், சிலர் தனிப்பட்ட காரணங்களால் அல்லது மறுப்பால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை நாடுபவர்களில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் முன்வைத்த கோரிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
FDP தேசிய கவுன்சிலர் Kurt Fluri இது தொடர்பில் குறிப்பிடுகையில், அரசு தடுப்பூசி கட்டாயம் என குறிப்பிட்டுள்ள நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களின் மருத்துவ செலவை காப்பீடு நிறுவனங்கள் ஏற்க கூடாது என பதிவு செய்துள்ளார்.
மேலும், தடுப்பூசி போடாதவர்களால் நமது சுதந்திரவும் பறிக்கப்படுகிறது என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
SP தேசிய கவுன்சிலர் Celine Widmer தெரிவிக்கையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றார்.