சுவிஸில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு மொத்த சலுகைகளும் ரத்து?
சுவிட்சர்லாந்தில் தனியார் நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகைகளை அளிக்க முடியாது என குறிப்பிட்ட நிறுவனங்கள் மறுத்துள்ளன.
கொரோனாவால் மிக அதிக இழப்புகளை எதிர்கொண்ட இத்தாலியில் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவும் தற்போது தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்படுவதை பரிசீலித்து வருகிறது.
ஆனால் சுவிஸில் ஒருவ்வொரு நிறுவனங்களின் முடிவுக்கு அதனை ஒப்படைத்துள்ளனர். இந்த நிலையில், குறிப்பிட்ட நிறுவனங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களிடம் பாரபட்சம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
சூரிச் மாநிலத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று முறையான தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்காத ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாது என தெரிவித்துள்ளது. மட்டுமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு மிகக் குறைவான ஊக்கத் தொகையும் அளிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது பாரபட்சமான செயல் என குறிப்பிட்டுள்ள ஊழியர்கள், தற்போதைய இக்கட்டான சூழலில் நிர்வாகத்திற்கு எதிராக குரல் எழுப்புவது தங்கள் வேலை வாய்ப்பை பாதிக்கும் என கூறியுள்ளனர்.
சில நிறுவனங்களில் தடுப்பூசி சான்றிதழ் அளிக்காத ஊழியர்களுக்கு நோய்வாய்ப்பட்டால் அளிக்கப்படும் தொகையும் மறுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் பல ஊழியர்கள் அடிக்கடி கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தங்கள் கைகாசில் செலவிடுவது என்பது ஏற்படுடையதல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பல நிறுவனங்கள் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் தங்கள் நடவடிக்கை சரியானது தான் வாதிட்டுள்ளன.