ஜேர்மனியில் நான்காவது கொரோனா அலைக்கு இவர்கள்தான் முக்கிய காரணம்
ஜேர்மனியில் நேற்று முதன்முறையாக ஒரே நாளில் 50,000க்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ள நிலையில், ஜேர்மனியின் நான்காவது கொரோனா அலைக்கு தடுப்பூசி பெறாதவர்கள்தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜேர்மனியில் சமீபத்தைய சில வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேருக்கு வரை வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஒவ்வொருவரும் தடுப்பூசி பெறாதவர்கள்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் துவங்கிய காலகட்டத்தில், கொரோனாவை திறம்பட கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாக ஜேர்மனி திகழ்ந்தது.
இன்னமும் சரியான வகையில் ஆட்சி அமையாத ஒரு சூழ்நிலையில், தடுப்பூசி அளிப்பதில் தொய்வு முதலான பல்வேறு காரணங்களால் ஜேர்மனியில் தினசரி கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
தடுப்பூசி பெறாததால் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் சிலர், அவர்கள் கொரோனாவால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகாத ஒரு வயது வரம்பிலுள்ளவர்களாக இருக்கும் நிலையிலும், அவர்களிடமிருந்து நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா பரவ, அப்படி கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தடுப்பூசி பெற்றிருந்தாலும் தீவிர சிகிச்சைப்பிரிவுகளை சென்றடையும் ஒரு நிலைமை உருவாகிவிடுவது குறிப்பிடத்தக்கது.