பிரான்ஸில் கொரோனாவால் இறந்தவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் எத்தனை சதவீதம்? அரசு அதிகாரப்பூர்வ தகவல்
பிரான்ஸில் கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் இறந்தவர்களில் 38% தடுப்பூசி போடாதவர்கள் என சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது.
பிரான்ஸில் 20 வயதிற்கு மேற்பட்டோர் மக்கள் தொகையில் இன்னும் சுமார் 9% தடுப்பூசி போடவில்லை.
இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அமைச்சகத்தின் புள்ளியியல் சேவையான Drees வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரம் படி, 2021 நவம்பர் 9ம் திகதி முதல் 2021 டிசம்பர் 5ம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் பிரான்சில் கொரோனா தொற்று உறுயானவர்களில் தடுப்பூசி போடாதவர்கள் 25 சதவீதத்திற்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 41% மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 52% தடுப்பூசி போடாதவர்கள், கொரோனாவால் இறந்தவர்களில் 38% தடுப்பூசி போடாதவர்கள் என சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது.
தற்போதைக்கு, பிரான்ஸில் 18 வயதிற்கு மேற்பட்டோர் மக்கள் தொகையில் 90% முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர் மற்றும் 92% ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள்.
பிரான்ஸில் 65 வயதிற்கு மேற்பட்டோர் மக்கள் தொகையில் 93% அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை அன்று 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு பிரான்ஸ் தேசிய ஆலோசனை நெறிமுறைக் குழு ஒப்புதல் அளித்தது.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் தான், ஆனால் முடிவு பெற்றோரின் விருப்பமாக இருக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.