சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு மேலும் ஒரு பின்னடைவு?
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துவருகிறது.
பலரும் இந்த கருத்தை ஆமோதித்து வந்த நிலையில், இப்போது, அது பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள ஒருவரிடமிருந்தே வந்துள்ளது.
பெடரல் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பின் பொருளாதார பேராசிரியரான Marius Brülhartதான் தற்போது கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
தடுப்பூசி பெறாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, சிகிச்சைக்கான செலவில் பெரும்பகுதியை அவர்களே ஏற்கவேண்டும் என்கிறார் அவர்.
அவ்வகையில், தடுப்பூசி பெற விரும்பாதவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதால், அவர்கள் மருத்துவக் காப்பீட்டுக்கு கூடுதல் தொகை செலுத்தவேண்டும் என்கிறார் அவர்.
இப்படி ஒரு நடைமுறை, சிங்கப்பூரில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.