மணமகனுக்கு மணப்பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த பிரமாண்ட திருமண பரிசு!
உத்தர பிரதேசத்தில் மணமகளின் குடும்பத்தினர் மணமகனுக்கு வழங்கிய தனித்துவமான பரிசு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமகளின் குடும்பத்தினர் மணமகனுக்கு திருமண பரிசாக புல்டோசர் வாகனத்தை கொடுத்துள்ளனர். அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூரில் திருமணம் நடைபெற்றது, அங்கு மணமகன் யோகேந்திர பிரஜாபதிக்கு மணமகளின் குடும்பத்தினர் திருமண பரிசாக புல்டோசர் ஒன்றை பரிசாக வழங்கினர்.
Photo: Twitter @KuldeepSharmaUP
இந்திய கடற்படையில் பணியாற்றும் யோகேந்திரா, புல்டோசர் வாகனம் மற்ற நான்கு சக்கர வாகனம் போல் அல்லாமல் வேலை தரும் என்கிறார்.
அதேபோல், புல்டோசர் தனது மகள் பணம் சம்பாதிக்க உதவும் என்று மணமகளின் தந்தை கூறியதாக கூறப்படுகிறது.
பரிசாக வழங்கப்பட்ட புல்டோசர் பலூன்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தத் திருமணம் டிசம்பர் 15-ஆம் திகதி நடந்தது.
Photo: Twitter @KuldeepSharmaUP