நோயாளியின் படுக்கையில் படுத்தவாறு வேலைபார்க்கும் மருத்துவர்: சர்ச்சை வீடியோ வைரல்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் மருத்துவர் ஒருவர், படுக்கையில் படுத்தபடி வேலைபார்க்கும் புகைப்படங்கள், வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நோயாளியின் படுக்கையில்
உத்தரபிரதேசத்தின் மௌரானிபூர் சமூக சுகாதார மையத்தில் மருத்துவர் ஒருவர், நோயாளியின் படுக்கையில் படுத்தபடி மருந்துச் சீட்டை எழுகிறார்.
அவருக்கு பின்னாள் வயதான பெண்ணொருவர் அமர்ந்து தனது உடல்நலப் பிரச்சனைகளை விவரிக்கிறார்.
வைரல் வீடியோ
அங்கிருந்த நபர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார்.இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளின் அவலநிலையை இதுபோன்ற நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக பலரும் கூறுகின்றனர்.
மேலும், அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அலட்சியமாக நடந்துகொள்வது இதுபோல் பலமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |