பள்ளிகளில் இனி செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்- அரசின் உத்தரவு
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் செய்தித்தாள் வாசிப்பை கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் உத்தரவு
பள்ளிகளில் காலை வகுப்பு தொடங்குவதற்கு முன்பு செய்தித்தாள் வாசிப்பதற்காக மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும்.
தேசிய, சர்வதேச மற்றும் விளையாட்டு செய்திகளில் இருந்து முக்கிய செய்திகளை ஒருவருக்கொருவர் வாசித்து காட்ட வேண்டும்.
இதற்காக பள்ளிகளில் தினமும் இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களை வாங்கி வைக்க வேண்டும்.

மேலும், செய்தித்தாள்களில் இருந்து 5 கடினமான சொற்களை தேர்வு செய்து இன்றைய சொல் என்ற தலைப்பில் அறிவிப்பு பலகையில் எழுத வேண்டும்.
செய்தித்தாள் தலையங்கத்தின் அடிப்படையில் மாணவர்களிடம் குழு விவாதம் நடத்த வேண்டும்.
மாணவர்களின் பொது அறிவு, சொல்வளம், கவனத்திறனை மேம்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |