திருமண நாள் விழாவில் மனைவியுடன் நடனமாடிய நபருக்கு நேர்ந்த துயரம்
தனது 25ஆவது திருமண நாள் விழாவில் மனைவியுடன் நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நாள் விழாவில் நடனமாடிய நபர்
🚨2 April 25 : Shoe merchant Wasim died of a #heartattack2025 while dancing with his wife on his 25th wedding anniversary in Bareilly district of Uttar Pradesh.#LuciferShotWorking #ChipShot pic.twitter.com/OrHYonE2NP
— Anand Panna (@AnandPanna1) April 3, 2025
உத்தரப்பிரதேசத்திலுள்ள பரேலி நகரில், தங்கள் 25ஆவது ஆண்டு திருமண நாள் விழாவை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்கள் ஒரு தம்பதியர்.
விழாவின்போது, கணவனும் மனைவியும் இணைந்து மேடையில் நடனமாடியுள்ளார்கள்.
நடனமாடிக்கொண்டிருக்கும்போதே திடீரென அந்த கணவர் நிலைகுலைந்து சரிய, அனைவரும் பதறிப்போய் அவரைத் தூக்கிக்கொண்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகக் கூற, அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.
அவரது பெயர் வாசிம் (Wasim Sarwat, 50) என்றும் அவரது மனைவியின் பெயர் ஃபரா (Farah) என்றும் தெரியவந்துள்ளது.
தம்பதியர் நடனத்தைத் தொடர்ந்து கேக் வெட்ட இருந்த நிலையில், கேக் வெட்டும் நிகழ்ச்சி நடக்காமலே போய்விட்டது.
இந்த அதிர்ச்சியளிக்கவைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |