இரவில் பாம்பாக மாறி கடிக்க வரும் மனைவி.., கணவர் பொலிஸில் புகார்
தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிக்க வருவதாக கணவர் பொலிஸில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பாக மாறும் மனைவி
உத்தரபிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாளின் போது, மின்சாரம், சாலைகள் உள்ளிட்டவை தொடர்பான பிரச்சனைகள் குறித்த புகார்களை மாவட்ட நீதிபதியிடம் மக்கள் கொண்டு வருவார்கள்.
அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற குறை தீர்க்கும் கூட்டத்தில் மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிக்கும் மிராஜ் என்ற இளைஞர் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த புகாரில், தனது மனைவி தினமும் இரவில் பாம்பாக மாறி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றதாக புகார் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தடுக்க சரியான நேரத்தில் தான் விழித்தெழுந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள், நான் தூங்கும்போது எப்போது வேண்டுமானாலும் என்னைக் கொலை செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த புகார் குறித்த பொலிஸாரை விசாரிக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |