இளம்பெண்ணுடன் ஹொட்டலில் தங்கிய நபர்: பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
இளம்பெண் ஒருவருடன் ஹொட்டலில் தங்க அறை எடுத்த ஒருவர், அவருக்கு பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
கழிவறைக்குச் சென்று திரும்பியபோது கண்ட அதிர்ச்சிக் காட்சி
உத்தரப்பிரதேசத்திலுள்ள Hathras என்னுமிடத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான உமேஷ் குமார் (38) என்பவர், நொய்டாவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் ஒரு அறை எடுத்துள்ளார்.
வியாழக்கிழமையன்று, ஒரு இளம்பெண்ணுடன் அவர் அந்த ஹொட்டலுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு கழிவறைக்குச் சென்ற அந்தப் பெண் மீண்டும் அறைக்குத் திரும்பிய நிலையில் அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியடைய வைக்க, அலறி சத்தமிட்டுள்ளார் அந்தப் பெண்.
ஆம், உமேஷ் அந்த அறையிலிருந்த ஒரு மின்விசிறியில் தூக்கிட்டுத் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
பொலிஸ் விசாரணையில், உமேஷ் ஏற்கனவே திருமணமானவர் என்றும், திருமணத்தில் பிரச்சினை என்பதால் அவரும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்துவருவதும், விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் நடப்பதற்கு முன், உமேஷுக்கும் அந்தப் பெண்ணுக்கும் வாக்குவாதம் நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |