மனைவியை சந்திக்க வெளிநாட்டிலிருந்து ஆசையுடன் வந்த இந்தியர்: மனைவி செய்த பயங்கர விடயம்
இந்தியர் ஒருவர் தனது மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்துள்ளார்.
அவரது மனைவியோ, தனது காதலனுடன் சேர்ந்து அவரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டார்!
மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய இந்தியர்
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார்.
தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, கடந்த மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்துள்ளார் ராஜ்புத். இந்நிலையில், மார்ச் மாதம் 4ஆம் திகதி திடீரென மாயமானார் ராஜ்புத்.
மாயமான ராஜ்புத்தின் மொபைலிலிருந்து செய்திகள் வர, யாரோ தங்களை திசைதிருப்ப முயல்வது பொலிசாருக்குத் தெரியவந்துள்ளது. பின்னர், அதைச் செய்தது ராஜ்புத்தின் மனைவி என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள் பொலிசார்.
பொலிசாருக்கு ராஜ்புத்தின் மனைவியான முஸ்கன் (Muskan, 27) மீதும் ராஜ்புத்தின் நண்பரான சாஹில் (Sahil, 25) மீதும் சந்தேகம் ஏற்படவே, அவர்கள் இருவரையும் பிடித்து விசாரிக்க, அதிரவைக்கும் தகவல் ஒன்று கிடைத்தது.
ஆம், முஸ்கனுக்கும் சாஹிலுக்கும் இடையில் தவறான உறவு இருந்துள்ளது. அது ராஜ்புத்துக்கும் தெரிந்துவிட்டிருக்கிறது.
இந்நிலையில், லண்டனிலிருந்து ராஜ்புத் இந்தியா திரும்ப, அவரது உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார் முஸ்கன்.
பின் அவரும் சாஹிலுமாக சேர்ந்து ராஜ்புத்தைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, ஒரு ட்ரம்மில் போட்டு, அதை சிமெண்டால் மூடிவிட்டனர்.
முஸ்கன் மற்றும் சாஹிலிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் ராஜ்புத்தைக் கொன்று துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் ட்ரம்மில் போட்டுவிட்டதை ஒப்புக்கொண்டதாக இன்றுபொலிசார் தெரிவித்துள்ளனர்.
ராஜ்புத்தின் உடல் பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |