தூக்கில் தொங்கி உயிரைவிட்ட மனைவி! துக்கம் தாளாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட கணவர்
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் மனைவி உயிரைவிட்ட துக்கம் தாளாமல், பொலிஸ் கணவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாக்குவாதம்
உத்தர பிரதேச மாநிலம் சித்ரகோட் மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மயங்க் குமார் (35).
பிஜ்நூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயங்க் குமார், 19ஆம் திகதி பணியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது மனைவி குஷம் தேவி (24) அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று இரவு மீண்டும் இருவரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து உயிரைவிட்ட தம்பதி
இதனால் மனமுடைந்த தேவி தனது அறைக்கு சென்று தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். மனைவியை முடிவை பார்த்து அதிர்ச்சியடைந்த மயங்க், துக்கம் தாங்காமல் தனது அரசு துப்பாக்கியைக் கொண்டு தன்னைத் தானே சுட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |